மிகப்பெரிய கேக்குடன் பிக் பாஸில் கொண்டாடப்பட்ட கமலின் பிறந்தநாள்

By Kanmani P  |  First Published Nov 6, 2022, 7:35 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட கேக்குடன் வாழ்த்துக்களும் படிக்க பிறந்தநாள் கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது. இது குறித்தான ப்ரோமோ விஜய் டிவி வெளியிட்டுள்ளது.


தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. முன்னதாக ஹிந்தி மொழியில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 6 வது சீசனை தொட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் அங்குள்ள பிரபலங்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். அதேபோல தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனிலிருந்து வார இறுதி நாட்களில் தொகுத்து வழங்கி வருகிறார் கமலஹாசன். 

இவரை சனி ஞாயிறுகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். எந்த காரணத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியை விட்டுக் கொடுக்கவில்லை கமல்ஹாசன்.  பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் பிக் பாஸை தொகுத்து இவர்தான் வழங்கி வந்தார். பின்னர்  பிக் பாஸ் அல்டிமேட் என்கிற பெயரில் ஓடிடி-ல் வெளியான ஷோவிற்கும் இவர்தான் முதலில் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் பாதியிலேயே விலகியதால் சிம்பு அதனை தொகுத்து வழங்கினார். கமலஹாசன் வழங்கி வருகிறார்.

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...suzane george : மைனா கொடூர வில்லி சூசனுக்கு இவ்வளவு பெரிய மகனா?

தற்போது 28 நாட்களை கடந்துள்ளது சீசன் 6. இந்நிலையில் நாளை கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 68வது பிறந்த நாளை கொண்டாடும் கமலஹாசனுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. அதன்படி இன்று விஜய் டிவியில் பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டதை அடுத்து கமலஹாசன் கலந்து கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட கேக்குடன் வாழ்த்துக்களும் படிக்க பிறந்தநாள் கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது. இது குறித்தான ப்ரோமோ விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

 

click me!