பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவை முத்தம் கொடுக்க சொல்லி டார்ச்சர் செய்த ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள சீரியல் நடிகை க்கு முதல் நாளில் இருந்தே நூல்விட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ரச்சிதாவுக்காக தான் சீரியல் பார்த்ததாகவும், அவர் தான் தனது கிரஷ் என்றும் சக போட்டியாளர்களிடம் ராபர்ட் பேசிய வீடியோக்களும் வெளியாகி வைரலாகின.
அதேபோல் ரச்சிதா மீது அதீத அன்பு கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டரிடம் ஆரம்பத்தில் இருந்தே நட்புடன் பழகி வருகிறார் ரச்சிதா. ஆனால் ராபர்ட் மாஸ்டரோ, ரச்சிதாவை ஓரக் கண்ணால் பார்ப்பதும், அவரை சுற்றி சுற்றி வருவது என தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக பல செயல்களை செய்து பார்த்துவிட்டார். ஆனால் ரச்சிதா இதற்கெல்லாம் மயங்கவில்லை.
இதையும் படியுங்கள்... அடிக்க பாய்ந்த மணிகண்டன்... முழுசா சந்திரமுகியாக மாறிய தனலட்சுமி - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ
Robert Master What is this
🤮🤮🤮🤮 pic.twitter.com/Frv1PbSxcn
இந்நிலையில், நேற்றைய டாஸ்க்கின் போது ரச்சிதா, ராபர்ட் மாஸ்டரை பார்த்து நீங்க எனக்கு சகோதரர் மாதிரி என சொன்னதைக் கேட்டு மனமுடைந்து போன ராபர்ட், உடனடியாக ரச்சிதாவின் கையை பிடித்துக் கொண்டு, தங்கச்சினா எனக்கு கிஸ் கொடுக்கனும் என சொல்ல, இதைக்கேட்டு ரச்சிதா சற்று ஜெர்க் ஆனார்.
பின்னர் ஒருவழியாக அவரிடம் இருந்து நழுவிய ரச்சிதா, நான் எனது சகோதருக்கு முத்தம் கொடுக்க மாட்டேன், கையெடுத்து கும்பிடுவேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார். ரச்சிதாவை முத்தம் கொடுக்க சொல்லி டார்ச்சர் செய்த ராபர்ட் மாஸ்டரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவும் ஒருவகையான பாலியல் சீண்டல் தான், அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றெல்லாம் குரல்கொடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் படத்துக்கே தண்ணிகாட்டிய தனுஷின் பொல்லாதவன்... ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக்வெட்டி கொண்டாடிய படக்குழு