பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களான ஏடிகே மற்றும் ஜனனி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கடந்த சில சீசன்களாக இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்ட இலங்கைய சேர்ந்த போட்டியாளர்களான மற்றும் தர்ஷன் ஆகியோர் மிகவும் பாப்புலர் ஆகினர். இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் இருவர் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஏடிகே மற்றும் ஜனனி. இதில் ஏடிகே பாடகராகவும், ஜனனி செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தவர்கள் ஆவர். அண்ணன், தங்கை போல் பழகி வந்த இவர்களிடையே சண்டையை மூட்டி விட்டுள்ளார் பிக்பாஸ்.
இதையும் படியுங்கள்... விரைவில் ‘சிங்கம் 4’... ஹரி இயக்கத்தில் மீண்டும் போலீசாக அவதாரம் எடுக்க உள்ள சூர்யா..!
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/MhG6BAzgft
— Vijay Television (@vijaytelevision)பிக்பாஸில் வாரந்தோறும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர் ஒருவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பிக்பாஸ் கேள்வி ஒன்றை கேட்பார். அதே கேள்வி வெளியில் அமர்ந்திருக்கும் மற்ற போட்டியாளர்களிடமும் கேட்கப்படும். அதில் கன்பெஷன் ரூமில் இருக்கும் போட்டியாளர் அளிக்கும் பதிலும் வெளியே உள்ள போட்டியாளர்கள் அளிக்கும் பதிலும் ஒத்துப்போனால் அந்த போட்டியாளருக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அவ்வாறு ஜனனியை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து, இந்த வீட்டில் நல்லவர் என்கிற முகமுடியுடன் இருக்கும் போட்டியாளர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஜனனி, ஏடிகே என பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு ஷாக் ஆன ஏடிகே, உன்னை தங்கை என நினைத்து பழகியது தவறா என கேட்டு அவருடன் சண்டையிட்டுள்ளார். அதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... ரசிகர்களே... ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க..! சிம்பு வைத்த வேண்டுகோளால் ஷாக் ஆன ரசிகர்கள்