கனவில் ஒரு வாகனம் அல்லது நகைகள் திருடப்பட்டால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

By Ramya s  |  First Published Aug 14, 2023, 8:46 AM IST

சில கனவுகள் பயமுறுத்துவதாகவும், மனதைக் குழப்புவதாகவும் இருக்கும்.


நம் எல்லோருக்குமே கனவு வரும். ஆனால் நாம் காணும் சில கனவுகள் மனதிற்கு அமைதியைத் தருவதாகவும், சில கனவுகள் பயமுறுத்துவதாகவும், மனதைக் குழப்புவதாகவும் இருக்கும். நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். கனவுகள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை கனவு சாஸ்திரம் சொல்கிறது. கனவில் வாகனம் திருடப்பட்டதைக் கண்டால் அது அபசகுண அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே, வரும் காலம் கடினமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. முக்கியமான வேலைகளில் தடைகள் வரலாம். நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைத் திருடுவது போல் கனவு கண்டால் அபசகுணமாக கருதப்படுகிறது. நீங்கள் ஒரு கனவில் ஒரு புதிய வீட்டைக் கண்டால், விரைவில் வேலை அல்லது வியாபாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஒரு கனவில் பல மாடி கட்டிடம் காணப்பட்டால், அது வாழ்க்கையில் செழிப்பு வருவதைக் குறிக்கிறது.உங்கள் கனவில் நீங்கள் ஒரு புதிய நகரத்தில் நுழைகிறீர்கள் என்றால், உங்கள் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்று அர்த்தம். உங்கள் கனவில் மூடிய கதவு கொண்ட வீட்டைக் கண்டால், அது வணிகத்தில் கடினமான சிக்கல்களை ஏற்படும் என்பதை குறிக்கிறது.

Tap to resize

Latest Videos

உங்கள் பெட்ரூமில் ஒருபோதும் இந்த 5 பொருட்களை வைக்காதீங்க.. பல பிரச்சனைகள் ஏற்படுமாம்

மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களை கனவில் பார்ப்பது அபசகுணமாக கருதப்படுகிறது. கனவில் வீடு கட்டினால் அது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. கனவில் கிணற்று நீரை பார்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே போல், ஒருவர் தன் கனவில் மழையைப் பார்ப்பது வேலையில் வெற்றியைக் குறிக்கிறது. கனவில் வெள்ள நீரை பார்ப்பது அபசகுணமாக கருதப்படுகிறது. உங்கள் கனவில் ஆற்று நீரை கண்டால், உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் என்பதற்கான அறிகுறியாகும். கெட்ட கனவுகளில் இருந்து நீங்கள் எழுந்தால், நீங்கள் மீண்டும் தூங்க வேண்டும்.

கனவு சாஸ்திரத்தின் படி, பிரகாசமான சூரிய ஒளியைப் பார்ப்பது நல்ல கனவாக கருதப்படுகிறது. வேதங்களில், சூரியன் புதிய வாழ்க்கையின் அடிப்படையாகவும் அடையாளமாகவும் கருதப்படுகிறது, எனவே ஒரு கனவில் பிரகாசமான சூரிய ஒளியைப் பார்ப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் விரைவில் நிகழும் என்பதாகும், இது உங்களுக்கு நல்லதாக இருக்கும். இது தவிர, வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைப் பெறலாம்.

மேலும் நீங்கள் குளிரில் நடுங்குவதை போல் கனவு கண்டால் ஒரு நல்ல கனவாகும். இந்த கனவு உங்கள் கெட்ட காலம் முடிந்து, இனிவரும் காலம் உங்களுக்கு செழிப்பாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும். இது தவிர, சில காரணங்களால் இன்னும் நிலுவையில் உள்ள உங்கள் சில பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்பதையும் இது குறிக்கிறது.

ஒரு கனவில் நீங்கள் ஷாப்பிங் செய்வதைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. இந்த கனவு உங்கள் வாழ்க்கையிலிருந்து நிதி நெருக்கடி நீங்கப் போகிறது என்று அர்த்தமாம். விரைவில் நீங்கள் திடீர் நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது. இது தவிர வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும்.

(குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஏசியாநெட் தமிழ் அதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை)

உங்கள் கனவில் இந்த நிற பூவை கண்டால் வீட்டிற்கு பணம் வருமாம்..!!

click me!