உங்கள் குடும்ப உறவுகளுக்கிடையே பிளவு, ஒரே சண்டை, சச்சரவு, இருக்கிறது என்றால் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இன்றைய காலத்தில் உறவுகளால் நிறைய பேருடைய நிம்மதி கெட்டுப் போவதாகக் கூறப்படுகிறது. உறவுகள் எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர். சொந்தங்கள் இருப்பதை விட அவர்கள் இல்லாமல் இருப்பது மேல் என்று பலருடைய எண்ணங்கள். ஆனால் இந்த எண்ணம் தவறு. ஏனெனில், சொந்தங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. உறவில் ஆயிரம் சண்டை சச்சரவுகள் வரும். ஆனால் அதற்காக உறவுகளை முறித்துக் கொண்டு செல்வது தவறு. எனவே, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது தவறில்லை.
குடும்பம் ஒற்றுமையாக இருக்க இந்த பூ மற்றும் உருளியை வையுங்கள்:
பொதுவாக எல்லாருடைய வீட்டிற்கு வெளியிலும் சிவப்பு செம்பருத்தி பூ செடி கண்டிப்பாகக் இருக்கும். இந்த சிவப்பு செம்பருத்தி பூ செடி நம் வீட்டிற்குள் வருபவர்களின் மன நிலைமையை அமைதிப்படுத்தும் மற்றும் மனதை குளிர்ச்சிப்படுத்தும். சொல்லப்போனால் நம் வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்களிடம் எதிர்மறையை ஆற்றலை நீக்கி, அவர்களுக்கு நேர்மை ஆற்றலைக் கொடுக்கும்.
இதையும் படிங்க: உங்க வீட்டுல பெட்டி பெட்டியாக பணம் குவியணுமா? இந்த 4 விஷயங்களை தவறாமல் பண்ணி பாருங்க!! நிச்சயம் பலன் உண்டு
உங்கள் வீட்டிற்கு வெளியில் இந்த செடியை வைக்க இடமில்லை என்றால், நீங்கள் சின்னதாக ஒரு உருளி எடுத்து, அதில் தண்ணீர் நிரப்பி ஒரு அல்லது அதற்கு அதிகமாக சிவப்பு நிற செம்பருத்தி பூவை அதில் போடவும். பின் அந்த ஊரிலியை வீட்டின் வரவேற்பறையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் முற்றிலுமாக அழித்து விடும். சொல்லப் போனால் உங்கள் வீட்டிற்கு வரும் எதிரி கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள்.
இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்.. தொழிலில் பல மடங்கு லாபம் கிடைக்குமாம்..
இதனால் உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் வராது. மேலும் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். குறிப்பாக இந்த சிவப்பு நிற செம்பருத்தி பூ குடும்பத்தின் மீது கண் திருஷ்டி விழாமல் பாதுகாக்கும். எனவே, உங்கள் வீட்டிலும் நிம்மதி இல்லையென்றால், ஒரே சண்டை, சச்சரவு, உறவுகளுக்கிடையே பிளவு இருக்கிறது என்றால் நீங்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.