உங்கள் குலதெய்வம்  தெரியவில்லையா? தெரிஞ்சிக்க இதை கண்டிப்பாக படிங்க..

By Kalai Selvi  |  First Published Aug 12, 2023, 4:12 PM IST

ஒருவர் தன்னுடைய குலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


இந்து மதத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். குலதெய்வ வழிப்பாடு ஒழுங்காக செய்யவில்லை என்றால் வீட்டில் ஒரே பிரச்சனை மற்றும் போராட்டமாக தான் இருக்கும். குலதெய்வ வழிபாடு என்பது மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் சேர்த்துப் பெற்று தரக்கூடியது ஆகும். குறிப்பாக எமன் கூட ஒருவரின் உயிரை எடுக்க குலதெய்வத்தின் அனுமதி பெற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க:  உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கா?? இல்லையெனில் இது மட்டும் செஞ்சா போதும்.!!

Tap to resize

Latest Videos

சிலர் கர்மவினையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பர். இதற்கு காரணம், அவர்களுக்கு தங்கள் குலதெய்வமே தெரியாமல் போவது தான். ஆகையால் இப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களது குலதெய்வத்தினை தங்களுக்கு காட்டிருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இச்சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் கேட்கக் கூடாது. குறிப்பாக இந்நாளில், விரதம் இருக்க வேண்டும் மற்றும் புலனடக்கம் தேவை.

இதையும் படிங்க:  குல தெய்வ வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமா?

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 9 வாரம் முழுமனதுடன் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். அர்ச்சனை முடித்த பின் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக கொடுக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்து வந்தால் காலபைரவர் உங்களின் குலதெய்வம் பற்றி யார் மூலமாகவோ அல்லது கனவிலோ அறிய வைப்பார்.

click me!