நெல் வயலில் களை எடுக்கும்போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவைகள்…

You need to pay attention when wearing rice in the rice field ...
You need to pay attention when wearing rice in the rice field ...


குதிரை வாலி: 

நெற்பயிரில் தோன்றும்  சுமார்  30 முக்கிய வகையானவைகளில் “குதிரை வாலி” மற்றும்  “வயல் தோரைகள்” நெற்பயிருக்கு பெரும் சேத்தை  விளைவிக்கின்றன.  மேலும் இரட்டை  இலைத்தாவரங்களான  கரிசலாங்கண்ணி, நீர்த்தாமரை , அரைக்கீரை, நீர்முள்ளி ஆகிய களைகளும்  நெல்  வயலில் தோன்றுகின்றன. 

தஞ்சை  மாவட்டத்தில் குதரை வாலி, கோரை, இஞ்சிப்புல், ஆட்டாங் கோரை, நீர்மேல் நெருப்பு, நீர்முள்ளி, காளாங்கீரை, கையாந்தொரை, வல்லாரை  மற்றும் கொட்டிக்கிழங்கு ஆகியன  அதிக அளவில் நெற்பயிரில்  தோன்றுகின்றன.

பொதுவாக நடவு பயிருக்கு முதல் 35  நாட்க்ளும், நேரடி விதைப்பு பயிருக்கு  முதல்  50 நாட்களும், நேரடி  விதைப்பு பயிருக்கு முதல் 50  நாட்களும், களையினால் பயிருக்கு  அதிFஅ சேதம் ஏற்படுகிறது. 

நெல் வயலில் தோன்றும்   களைகளின் எண்ணிக்கை, வகைகள் ஆகியவைநிலத்தின் ஈர அளவு மற்றும் நீர்மட்டம் இவற்றைப்பொறுக்த்து அமைகிறது.  வயலில் 5-10 செ.மீ.  உயரத்திற்கு தொடர்ந்து நீர்  த்க்கி வைத்தால் புல் மற்றும் கோரை வகைகளை ஒழித்துவிடலாம்.

களை எடுத்தல்:

உரிய நேரத்தில் களைகளை அகற்றுவதால் நேரமும்,  ஆட்செலவும் குறைகிறது. நடவு மற்றும் நேர விதைப்பிற்கு 2 ம்றை (3 ம்ற்றும் 5-ம் வாரம்) களைகளை எடுப்பதால் பெரும்பாலான  களைகளை த்டுக்க முடியும்.

ரசாயன களை  தடுப்பு  முறை:

நாற்று நட்ட  3-ம் நாள்  வயலில் சிறிது நீர் நெறுத்தி (2.5 செ.மீ.) பூட்டாக்குளோர் அல்லது த்யோபென்கார்ப் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு  2.5 லிட்டர்  அல்லது அனிலோபாஸ் 1.25 லிட்டர் என்ற அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து வயல் முழுவதும் சீராகத் தூவவேண்டும்.  களைக்கொல்லி இட்டபிறகு 2, 3 நாட்களுக்கு  தண்ணீரை வடிகட்டவும் கட்டவும் கூடாது.

நடவு செய்த வயலில் அகன்ற இலை களைகள் அதிகம் இருந்தால் புட்டோகுளோர் (அல்லது)  தையோபென்கார்ப் எக்டேருக்கு 1.5  லிட்டர் அல்லது  அனிலோபாஸ்  1 லிட்டர் 24 டி.இ.இ. என்னும் களைக் கொல்லியை எக்டேருக்கு 600 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பது எல்லா வகை களைகளையும் நல்ல முறையில் கட்டுப்படுத்தும். 

இவ்வாறு களை முளைக்கும்  முன் தெளிக்கும் களைக்கொல்லிகளான  தையோபென்கார்ப், புட்டோகுளோர், அனிலோபாஸ் போன்றவற்றை தெளிக்கமுடியவில்லை என்றால் களை முளைத்த பின் தெளிக்கக்கூடிய 2, 4- டி சோடியம் உப்பு என்ற  க்ளைக்கொல்லியை எக்டேருக்கு 1.25 கிலோ வீதம் 750 லிட்டர்  நீரில்  கலந்து கைத்தெளிப்பான் கொண்டு  பயிரின் வரிசையின் ஊடே முளைத்து, இருக்கும் களை இலைகளின் மீது நட்ட  20-ம் நாள் தெளிக்க வேண்டும். 

இவ்வாறு  களைக்கொல்லி தெளித்த  வயலில் 35-ம் நாள் ஒரு கைக்களை எடுத்தால் களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட ஒரு சில களை வகைகளையும் கட்டுப்படுத்தும்.

உழவியல் முறைகள்: பயிரின் முதல் 3-ல் ஒரு பங்கு வயது நாட்கள் களை முளைப்பதை தடுத்துவிட்டால் பின்பு முளைக்கும் களைகளால் பயிருக்கு  எந்த வித பாதிப்பும் ஏற்படாது. 

சில  உழவியல் முறைகள் வருமாறு.

கோடை உழவு செய்தல்:

களை விதை கலப்பில்லாத வித்துக்களை  தேர்ந்தெடுத்தல்.

நல்ல முளைப்பு திறன் கொண்ட  விதைகளை தக்க  பருவத்தில்  விதைத்தல்.

குறிப்பிட்ட  பகுதிக்கு  ஏற்ற ரகத்தினை உபயோகப்படுத்துதல்.

அதிக இலைப்பரப்பும்,  அதிக சிம்புளையும் கொண்ட  விரைவில்  வளரக்கூடிய  நெல்

ரகங்களை தேர்ந்தெடுத்தல்.

பாசன நீர் நிர்வாக முறையில்  நீரை வயலில் கட்டுவதால் பல களை விதைகள் சூரிஅ ஒளி கில்லாமலும், கரியமில வாயு கிடைக்காததாலும்  முளைக்காது.  இம்முறை மூலம்  நெல்  வயலில் கோரை போன்றகளைகளை   ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

எனவே நெல் வயலில் ஒருங்கிணைந்த களை நிர்வாக் முறைகளை கையாண்டு பயிரின் ஆரம்ப வளர்ச்சி  காலத்தில் களையில்லா நிலையினை உருவாக்குதல் நல்லது. 

இவ்வாறு செய்வதால்  நெல்லுக்கு இடக்கூடிய  உரம் மற்றும் நீர் போன்ற இடு பொருள்களின் உபயோகிப்புத்திறன் கூடி நல்ல மகசூலுக்கு வழிகோல்கின்றன.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios