Would increase productivity Do these techniques ...

1.. வளமான நிலங்களில் இதர பயிர்களுடன் ஊடுபயிராக கலப்புப்பயிராக வரப்பு ஓர பயிராக பயிர் செய்தல் வேண்டும்.

2.. வறட்சி தாங்கும் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.

3.. நிலச் சீர்த்திருத்தம் மற்றும் மழை நீர் சேகரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

4.. அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்து நன்கு விதைகளை பக்குவப்படுத்தி விதைக்க வேண்டும்.

5.. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சான்று பெற்ற விதைகளை அரசு வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து வாங்கி பயன்படுத்திட வேண்டும்.

6.. விதை நேர்த்தி செய்து,விதைக்கும் கருவி கொண்டு விதைக்க வேண்டும்.

7.. பூ,காய் உதிர்வதை தடுக்க டிஏபி, பிளானோபிக்ஸ் ஆகியவை தெளிக்க வேண்டும்.• ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.• தகுந்த பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படல் வேண்டும்.

8.. உற்பத்தித் திறன் அதிகம் கொண்ட துவரை, உளுந்து,தட்டைப்பயறு ஆகிய பயிர்களை தனிப்பயிராக இறவையில் பயிரிட வேண்டும்.