தர்பூசணியில் தோன்றும் பூச்சிகளை ஒழிக்கும் வேப்பெண்ணெய் கரைசல்…
வேப்பெண்ணெய் கரைசல்
தர்பூசணி விதை ஏக்கருக்கு 400 கிராம் விதை தேவைப்படும். முதல் நாள் ராத்திரி பசும்பாலில் விதைகளை ஊற வைத்து, மறுநாள் ஓலைக்கூடையில் கொட்டி உலர்த்தி, குழிக்கு 5 விதை வீதம் விதைத்து பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
10 ஆவது நாளில் 10 மி.லி வேப்பெண்ணெயுடன் 10 மி.லி. காதிசோப் ஆயிலையும் (ஒட்டும் திரவம்) சேர்த்து பூவாளியால் தெளித்துவிட வேண்டும். 13-ஆம் நாளில் செடிக்கு செடி மண்ணை அணைச்சி தண்ணீரை பாய்ச்சி, 20-ஆம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 10 மி.லி. வேப்பெண்ணைய், 10 மி.லி காதிசோப் ஆயில் கலந்து கை தெளிப்பான் மூலம் தெளித்து வேப்பெண்ணெய் கரைசலை மாலை நேரத்தில் அடித்தால் நல்லது.
அப்பொழுதுதான் பூச்சி, வண்டு இதெல்லாம் ஒண்ணு கூடி வந்து ருசி பார்த்து மொத்தமும் காலியாகிவிடும். செடியும் வாடாது.
25-வது நாளில் இருந்து கொடியானது பரவ ஆரம்பித்துவிடும். மேலுரமாக காம்ப்ளக்ஸ் 90 கிலோ, யூரியா 75 கிலோ, 25 ஆம் நாள் இடவேண்டும். 40 வது நாளில் பிஞ்சுவர ஆரம்பித்துவிடும்.
மீண்டும் 2-வது மேலுரமாக 45-வது நாள் 125 கிலோ பொட்டாஷ் மற்றும் 75 கிலோ யூரியா இட வேண்டும்.
இப்படி செய்வதால் தர்பூசணியில் தோன்றும் பூச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.