Asianet News TamilAsianet News Tamil

நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய பூவரச மரம் பற்றி அறிந்து கொள்வோமா?

Will we learn about a tree that lives over the centuries?
Will we learn about a tree that lives over the centuries?
Author
First Published Aug 11, 2017, 12:28 PM IST


 

மனித வாழ்வின் ஆதாரமான மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது.

பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர்.

நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.

இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.

இது கொட்டைப் பூவரசு, சாதாரணப் பூவரசு என இருவகைப்படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு.

கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

இதய வடிவிலான இலைகள், மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல், குளிர்ந்தக் காற்று … இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம்.

கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.

அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால் கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.

இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு.

பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. நடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை

இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பன்ற பூவரசு மரங்களை நட்டு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, நமது ஆரோக்கியத்தையும் வளமாக்கிக்க முடியும்.

ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

Follow Us:
Download App:
  • android
  • ios