மாட்டிற்கு மடிநோய் வந்தால் என்னென்ன வழிகளை பின்பற்றணும்? தெரிஞ்சுக்குங்க...
மடிநோய்
** மடிநோய் வருவதற்கு முக்கிய காரணம் அது கட்டுத்துறை சுத்தமாக இல்லாததுதான். சுத்தமின்மை கிருமிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.
** கட்டுத்துறை எப்பொழுதும் ஈரமில்லாமல் இருக்க வேண்டும்.
** சாணம், மூத்திரம் அடிக்கடி அகற்றப்பட வேண்டும்.
** மடி நோய் வந்துள்ள மடியில் வீக்கம் இருந்தால் கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்முன்றையும் மைய அரைத்து வீங்கி உள்ள மடியின் பக்கம் தடவவும்.
** பால் கறப்பவர் பால் கறப்பதற்கு முன் தன்னுடைய கையை நன்றாக சோப்பினால் கழுவி சுத்தமாக துடைத்து பின் பால் கறப்பத நல்லது.
** பால் கறப்பற்கு முன் காம்பினை நன்றாக கழுவி அதை ஈரமில்லாமல் துடைத்து பின் கட்டை விரலை நிமிர்த்தி, எண்ணெய்யோ அல்லது வெண்ணையோ தடவி கறப்பது மிகவும் நல்லது.
** கட்டை விரலை மடித்து கறப்பதை தவிர்க் க வேண்டும். ஏனெனில் அவ்வாறு மடித்து கறக்கும் போது பால் வரும் துவாரம் சேதப்படும். இது கிருமிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையாகும்.
** பால் கறந்து முடிந்தபின் மீண்டும் காம்புகளையும் மடியையும், நீரால் சுத்தம் செய்து துடைக்கவும். பால் கறந்த உடன் மாடு படுப்பதை தவிர்க்க வேண்டும்.
** ஏனெனில் பால் கறந்து முடிந்த உடன் பால் வரும் துவாரம் திறந்து இருக்கும். அப்பொழுது மாடு படுத்தால் தரையில் உள்ள அழுக்குகள் மூலமாக கிருமிகள் உள்ளே சென்று மடிநோயை உண்டாக்கும்.