பால் உற்பத்தியை தொடங்க எந்த மாதிரியான அமைப்பு தேவை? இதை வாசிங்க தெரியும்...
பால் பண்ணையின் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாகரிக மற்றும் சிறந்த அறிவியல் கொள்கைகள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும்.
பால் உற்பத்தியை தொடங்க உதவும் வீட்டமைப்பு:
** கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் ஈரப்பதம் இன்றி வறட்சியாக அமைக்க வேண்டும்.
** அடைமழை போன்ற பெரு மழையின் போது நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கூடாரம் அமைக்க தவிர்க்க வேண்டும்.
** இதனுடைய சுவர்கள் 1.5 வழ 2 மீ உயரம் இருக்க வேண்டும்.
** இந்த கூடாரத்தின் சுவர்கள் ஈரம் கசியாத வண்ணம் பூசியிருக்க வேண்டும்.
** இதன் கூரை 3-4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
** இந்த மாட்டு தொழுவம் சிறந்த காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.
** இந்த தரை சரியான /கடினமான, வழுக்காத, சிறந்த முறையாக (3 செ.மீ) நீர் வடிய கூடிய முறையில் எளிதில் உலரும் படியாகவும் சரிவாக அமைக்க வேண்டும்.
** வளர்க்கப்படும் கால்நடைகள் நிற்கும் இடமானது 0.25மீ அளவில் சரியான அகன்ற வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.
** ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 2x1.05 மீ ஆகும்.
** கால்நடைகளுக்கான தீனி தொட்டி 1.05 மீட்டர் இடத்திலும் அதன் முன் உயரம் 0.5 மீ மற்றும் அதன் ஆழம் 0.25 மீட்டர் அளவிலும் இருக்க வேண்டும்.
** தீவனத் தொட்டி , தண்ணீர் தொட்டி, வடிகால் வசதி மற்றும் சுவர்கள் இவைகள் யாவும் எளிதில் தூய்மை படுத்தும் வண்ணம் அமைக்க வேண்டும்.
** ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 5- 10 ச.மீட்டர் அளவில் ஒதுக்கீட செய்ய வேண்டும்.
** வெயில் காலங்களில் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
** குளிர்காலத்தில் இரவு நேரத்திலும், மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.
** நாள்தோறும் கால்நடைகளுக்கு தனித்தனி கிடைப்படி ஓதுக்க வேண்டும்.
** கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும்.
** வெளிப்புற ஒட்டுண்ணிகளான (பேன், ஈக்கள் ) இவற்றிலிருந்து காக்க சுவர்களுக்கு மாலத்தியான அல்லது காப்பர் சல்பேட் தெளிக்க வேண்டும்.
** கால்நடைகளின் சிறுநீர் சிறு குழிகளில் சேகரிக்கப்பட்டு பின் அதை பாசனக் கால்வாயில் சேர்க்க வேண்டும்.
** கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சாண எரிவாயு கலனை சிறந்த முறையில் அமைக்க வேண்டும். சாண எரிவாயு கலன் என்பது சாணத்துடன் பண்ணை கழிவுகள் கால்நடை கழிவுகளை சேர்த்து தயாரிப்பதாகும்.
** கால்நடைகளுக்குத் தேவையான இடைவெளி ஒதுக்க வேண்டும்.