What kind fertilisers should use in house garden

வளர்க்கப்போகும் செடியின் அளவுக்குத் தகுந்த தொட்டிகளையோ, பைகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றில், தென்னை நார்க்கழிவு, மணல், வண்டல் மண், செம்மண், தொழுவுரம், ஆட்டு எரு, மண்புழு உரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தேவையான விதைகளை நடவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தொட்டியிலும் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களில் தலா 100 கிராம் இட வேண்டும்.

நடவு செய்த செடிகளில் பிஞ்சுப்பருவம் வரும்போது, ஒவ்வொரு தொட்டியிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும்.

அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செடிகள் வாடும்போது பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். பூச்சிகள் தென்பட்டால் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும்.

பூ பிடிக்கும் பருவம், பிஞ்சுப் பருவத்தில் மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.

அனைத்துக் கரைசல்களையும் ஒரு லிட்டருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்