Asianet News TamilAsianet News Tamil

பீஜாமிர்தத்தை கொண்டு விதைநேர்த்தி  இப்படி தான் செய்யணும்?

What is the seedlings with beejamirtham?
What is the seedlings with beejamirtham?
Author
First Published Apr 3, 2018, 1:30 PM IST



பீஜாமிர்தத்தை கொண்டு விதை நெல்லை நேர்த்தி செய்யும் முறை

** 10 லீட்டர் தண்ணிரில் 1 கிலோ கல்லுப்பை கரைத்து, அதில் 10 கிலோ விதை நெல்லை இடவேண்டும். 

** தண்ணிரில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு, மூழ்கிய நெல்லை மட்டும் எடுத்து நீரில் அலசி, அதிலிருந்து 9 கிலோ நெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும்.

** அடுத்து சணல் சாக்கில் நெல்லை கொட்டி மூட்டையாகக் கட்டி 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

** பின்னர் பிஜாமிர்தத்தில் 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்து அதன்பின் 24 மணிநேரம் இருட்டில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

** இந்த விதைகளை நாற்றங்காலில் தூவி, விதைகள் வளர்ந்து 25 முதல் 30 நாட்களில் நாற்றானதும் அவற்றை எடுத்து வயலில் நடுகிறோம். 

** நெல் நாற்றுகளை வயலில் நட்ட பிறகு, முதல் நீர் பாய்ச்சும்போது ஜீவாமிர்தம் என்னும் மற்றொரு கலவையை சேர்த்துப் பாய்ச்ச வேண்டும்.

பீஜாமிர்த்தின் நன்மைகள்

** வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தாக்குதள் தடுக்கப்படும்

** எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை

Follow Us:
Download App:
  • android
  • ios