கால்நடைகளை அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப பராமரிக்க ஆகும் செலவு எவ்வளவு? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...
** கால்நடை பராமரிப்புக்கு ஆகும் செலவு – வளர்ந்த ஆடு – ரூ.10, குட்டி – ரூ.5
** ஒரு வருட பெண் ஆடு மற்றும் ஆண் ஆட்டிற்கு இப்பொழுது இருக்கும் விலை ரூ.1200 மற்றும் ரூ. 1,600
** செம்மறியாட்டுக் குட்டி வளர 12 மாதம் ஆகும். செம்மறியாட்டு குட்டி சதவிகிதம் 75 மற்றும் இன விகிதம் 50:50
** செம்மறியாட்டுக் குட்டிகள் மற்றும் முதிர் ஆடுகளின் இறப்பு வீதம் 10% மற்றும் 5% ஆகும்.
** பெண் ஆட்டுக் குட்டிகள் கூடாரத்தில் வைக்கப்படும் 8-9 வயதுடைய ஆண் ஆடுகள் விற்பனை செய்யப்படும்.
** பெண் ஆடுகளின் தரப்பகுப்பு 20 சதவீதமாகவும், மூன்றாவது வருடத்திலிருந்து அதற்கு அதிகமாகவும் தரப்பகுப்பு செய்யப்படுகிறது.
** ஒரு வளர்ந்த ஆட்டிற்கு மேய்ச்சல் செலவு ஒரு வருடத்திற்கு 4 ரூபாயாகும்.
** கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஆட்டிற்கு 30 நாட்களுக்கான அடர் தீவன செலவு ( ஒரு ஆட்டிற்கு 250 கிராம்) ஒரு கிலோவிற்கு 5 ரூபாயகும்.
** ஒரு வருடத்திற்கு காப்பீடு 4 % ஒரு வளர்ந்த ஆட்டிற்கு, ஒரு வருடத்திற்கான மருத்துவச் செலவு ரூ. 10 மற்றும் 5 ரூபாயாகும்.
** ஒரு வருடத்தில் 2 முறை உரோமம் எடுக்கப்பட்டுள்ளது. வளர்ந்த ஆடானது ஒரு வருடத்திற்கு 1.2 கிலோ என்ற அளவில் உரோமத்தையும், இளம் ஆடு ஒரு வருடத்திற்கு 600 கிராம் என்ற அளவில் உரோமத்தை தருகின்றன.
** ஆண்குட்டியின் விலை ரூ.800, வளர்ந்த பெண் ஆடு ஒன்றின் விலை ரூ.1000, வளர்ந்த ஆடு ரூ.1200
** ஒரு வளர்ந்த ஆட்டிற்கு ஒரு வருடத்திற்கு கொட்டிலில் அடைக்க ஆகும் செலவு ரூ.8 வருடத்திற்கு 2 முறை இந்த மாதிரி கொட்டிலில் அடைக்கப்படும். வளர்ப்பிற்கு ஆகும் செலவு ஆரம்ப இருப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது.