What is the cause of cynicism in dairy cows Some more questions and answers inside ...

** கறவை மாடுகளில் சினைத் தங்காமை 

கறவை மாடு வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை சினை பிடிக்காததாகும். மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்திருப்பதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து அதற்கு சரியான நேரத்தில் இனவிருத்தி செய்யாதிருப்பதற்கு மாடு வைத்திருப்பவரிகளின் அறியாமைதான் முக்கிய காரணமாகும். 

** கிடேரிகளை சினைப்படுத்துவதற்கு ஏற்ற வயது என்ன?

பொதுவாக கலப்பினக் கிடேரிகளை நல்ல முறையில் பராமரிக்கும் பொழுது 15 முதல் 18 மாத வயதில் பருவமடைந்து சினைப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றன. அப்போது அதன் உடல் எடையும் (200 – 250 கிலோ), இனப்பெருக்க உறுப்புக்களும் போதுமான வளர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

** சினைத் தருண அறிகுறிகள் யாவை?

a. மாடுகள் அமைதியின்றி காணப்படும்.

b. தீவனம் மற்றும் தண்ணீர் வழக்கத்தைவிட குறைந்த அளவு எடுத்துக்கொள்ளும்.

c. பிறமாடுகள் மேல் தாவும் மேலும் பிறமாடுகள் தன்மீது தாவ அனுமதிக்கும்.

d. அடிக்கடி சிறுநீர் கழியும்.

e. பிறப்புறுப்பிலிருந்து தெளிந்த கண்ணாடி போன்ற திரவம் வெளிப்படும் மேலும் இவை கயிறுபோல் வந்து தரையில் படவும் வாய்ப்பிருக்கிறது.

** ஊமை சினைத்தருண அறிகுறிகள் என்றால் என்ன?

எருமை மாடுகளில் சினைத்தருண அறிகுறிகள் எளிதாக வெளியில் தென்படுவதில்லை. குறிப்பாக கன்று ஈன்ற எருமைகள் நீண்ட நாட்களுக்கு சினைக்கு வராமல் இருக்கும். இதில் பெரும்பகுதி சினைப்பருவ அறிகுறிகளை வெளியில் காட்டாது.

இதைத்தான் ஊமைச் சினைத்தருண அறிகுறிகள் என்று அழைக்கப்படுகிறது. எருமைகளில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் இரவு நேரங்களில் அதிகமாகக் கத்துதல்தான் முக்கிய சினைத்தருண அறிகுறிகளாக கருதப்படுகிறது.

** மாடுகள் பெரும்பாலும் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில்தான் சினைப்பருவத்திற்கு வருமா?

கறவை மாடு வளர்ப்போரிடையே மாடுகள் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில் சினைக்கு விடும் பழக்கம் உள்ளது. இது ஒரு தவறான நம்பிக்கையாகும். ஏனெனில் பருவமடைந்த கிடேரிகள் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப் பருவத்திற்கு வரும். இத்தருணத்தில் இனவிருத்தி செய்து பயன்பெற வேண்டும்.


** மாடுகளை சினைப்படுத்த சரியான நேரம் எது?

இன்றைய சூழ்நிலையில் மாடுகளில் சினைத்தங்காமை ஏற்படுவதற்கு முக்கியக்காரணம் மாடுகளைச் சரியான தருணத்தில் சினைப்படுத்தாதது ஆகும். பொதுவாக கிடேரி மற்றும் பசுக்கள் 18 முதல் 24 மணிநேரம் சினைப்பருவத்தில் இருக்கும். இந்நேரத்தில் மாடுகளைச் சினப்படுத்திவிட வேண்டும். அதாவது காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் அன்று மாலையிலும், மாலையில் தென்பட்டால் அடுத்த நாள் காலையிலும் சினைப்படுத்த வேண்டும்.