அசோலாவில் அப்படி என்ன இருக்கு? அனைத்து கால்நடைகளுக்கும் பரிந்துரைக்கப்படுவது ஏன்?
அசோலாவின் பயன்கள்
அசோலாவில் புரதம், அமினோ அமிலம், கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.
அசோலாவில் காய்ந்த நிலையில் 30 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் 20 சதம் அமினோ அமிலம் உள்ளதால் கால்நடைகளுக்கு செரிமானச் சக்தி தருகிறது.
அண்டை மற்றும் மேலை நாடுகளில் நெல் விளையும் பகுதிகளில் அசோலாவை பயன்படுத்தி தழைச்சத்தை நிலைப்படுத்தலாம்.
நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுகிறது. இது ஒரு ஏக்கருக்கு 3-4 கிலோ வரை தழைச்சத்தை தரும். இது காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து நெற்பயிர்களுக்கு கொடுக்கும்.
வயல்களில் களை வளராது. மேலும் யூரியாவினால் எந்த அளவு பயன் உண்டோ அந்த அளவிற்கு பயன் உண்டு.
மேலும் மற்ற உரங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக அசோலா பயன்படுத்துவதன் மூலம் இயற்கை நெல் உற்பத்தி செய்வதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படும்.
சப்போட்டா, மாதுளை செடிகளுக்கும் அடி உரமாக அசோலாவைப் பயன்படுத்தும்போது அதிகப் படியான மகசூல் கிடைக்கும். மேலும் விளைச்சல் பல மடங்கு பெருகும்.
அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
இது எல்லா வகையிலும் பயன்படுவதாக அமையும். செலவுகுறைவு. மண்வளம் காத்தல் போன்றவயாகும்.