செம்மறி ஆடு வளர்ப்பு

வருடத்துக்கு 450 குட்டிகள்.சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தாலும் சரி... பெரு விவசாயிகளாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். 

அதிலும் குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். தற்போது விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் சுருங்கிக் கொண்டே வரும் சூழ்நிலையில், 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு’ விவசாயிகளிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளைக் கலப்பினம் செய்து, கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார்கள்.

போயர் ஆடுகள்!

'போயர் ரக ஆடுதான் சீக்கிரமாவே அதிக எடைக்கு வந்துடும்னு. அதனால மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து ஒரிஜினல் போயர் ரகத்துல 18 பெட்டைகளையும், 2 கிடா ஆடுகளையும் வாங்கிக்கலாம். 

அதோட தலைச்சேரி, சிரோஹி, கன்னியாடு, கொடியாடு ரக பெட்டைகளையும் வாங்கி வளர்த்தால் லாபம் உறுதி. 

ஒவ்வொரு இனத்தோடயும் போயர் கிடாக்களைக் கலப்பு செஞ்சு பாத்ததுல, தலைச்சேரி இனத்தோட கலப்பு செஞ்சு பிறந்த குட்டிக மத்ததுகளவிட சாதுவாவும் ஆரோக்கியமாவும் இருக்கும். 

அதோட ஒரே ஈத்துல மூணு குட்டிக வரைக்கும் பிறந்ததால் 100 தலைச்சேரி பெட்டைகளை வாங்கி இப்போ போயர் கிடா, தலைச்சேரி பெட்டைகளை மட்டும் கலந்து கலப்பினக் குட்டிகளை பெருக்கி கொண்டு இருக்கின்றனர் தென் மாவட்ட மக்கள்.

இந்த மாதிரி இனக்கலப்பு செய்யும்போது ஆட்டோட வயசு, எத்தனை முறை குட்டி போட்டிருக்கு, எத்தனை குட்டிக, எப்போ கிடாவோட சேர்த்தோம், என்னென்ன வைத்தியம் பார்த்திருக்கோம்னு அத்தனைத் தகவலும் குறித்து வைத்துக் கொள்ளுதல் நல்லது.