கோழி எருவை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

What are the benefits of using poultry manure?
What are the benefits of using poultry manure?


** கோழிப்பண்ணைக் கழிவில் மற்ற கால் நடைகளின் கழிவைக்காட்டிலும் அதிக அளவு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. 

** இவ்வாறு சத்துக்கள் இருப்பது இக்கழிவினை சிறந்த உரமாக மாற்றிப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. 

** தென்னை நார்க் கழிவுடன் கலந்து மக்கச் செய்வதன் மூலம் கோழிப்பண்ணைக் கழிவிலுள்ள தழைச்சத்து இழப்பை, மிக்க ஆற்றலுடன் கட்டுப்படுத்துவதுடன் பயிர்களுக்கு நல்ல இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. 

** கோழிப்பண்ணைக் கழிவிலுள்ள அங்ககச் சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்கச் செய்ய, இக்கழிவை அம்மோனியா ஆவியாதலை குறைக்கும் வகையில் மக்க வைக்க வேண்டும். 

** இத்தொழில்நுட்பம் கோழிவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

** கோழி எருவை எக்டருக்கு 6 டன் என்ற அளவில் இயற்கை உரமாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 

** இத்தொழிலை வியாபார நோக்கில் செய்யும் போது கோழிப்பண்ணைக் கழிவுகள் குறைந்த விலையில் தடையின்றி கிடைக்குமாறு வழி வகை செய்ய வேண்டும்.

கோழி எருவின் மதிப்பு

** கால்நடை எருக்களில், குறிப்பாக கோழி எருவில் தழைச்சத்து அதிகமாக காணப்படுகிறது. 

அம்மோனியா ஆவியாதல் மூலமாக எருவிலுள்ள தழைச்சத்து இழப்பாகிறது. இதனால் கோழிக் கழிவிலுள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன. 

** கோழிப்பண்ணைக் கழிவை தென்னை நார்கழிவு போன்ற கரிமச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் தகுந்த நுண்ணுயிரிகள் கலந்து மட்கச் செய்வதால் தரம் வாய்ந்த கோழி எருவானது கிடைக்கின்றது. 

** இம்முறையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் கோழி எருவை மதிப்புமிக்க எருவாக மாற்ற முடியும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios