கொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன?c
கால்நடை வளர்ப்பு என்பது இந்தக் காலத்தில் மிகவும் கடினமாகிக் கொண்டே வருகிறது. வெள்ளாடு உள்ளிட்டவைகளை கொட்டில் முறை ஆடு வளர்ப்பு மூலம் வளர்ப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆடுகளை வெளி இடங்களில் வளர்க்காமல், ஒரே இடத்திலேயே வைத்து வளர்ப்பது தான் கொட்டில் முறை.
கொட்டில் முறையில் வளர்க்கும் போது அலைச்சல் இல்லாததால் சீக்கிரம் உடல் பெருக்கும். தீவனத் தேவை குறையும்.
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க விரும்புறவங்க, முதல்ல ரெண்டு ஏக்கர் அளவுக்காவது தண்ணீர் வசதியுள்ள தோட்டத்தைத் தயார்படுத்திக்கணும். அகத்தி, சூபாபுல், வேலி மசால் இதையெல்லாம் வேலியா நடலாம்.
கம்பி வேலி அமைச்சாலும் ரொம்ப நல்லது. ஒரு ஏக்கர் அளவுல பசுந்தீவனங்களை கட்டாயம் பயிர் பண்ணனும். மீதி இடங்களை ஆடு வளர்ப்புக்குத் தயார் பண்ணிக்கலாம். பசுந்தீவனம் வளர்க்கற இடம், ஆடுகள் இருக்கற இடம் ரெண்டுக்கும் நடுவுலயும் வேலி அமைக்கணும்.
20 பெட்டை, ஒரு கிடா கொண்ட கூட்டத்தை ஒரு யூனிட்டுன்னு சொல்வோம். வளர்ந்த ஒரு பெட்டை ஆட்டுக்கு, பதினைந்து சதுர அடி இடம் தேவை. கிடா, சினை ஆடு, குட்டிப் போட்ட ஆடுகளுக்கு இருபது சதுர அடி தேவைப்படும். ஆக, ஒரு யூனிட்டுக்கு 20 வளர்ந்த பெட்டைகள், 1 கிடா, பத்து பதினைந்து குட்டிகள்ன்னு கணக்குப் போட்டால் சுமாரா 650 சதுர அடியில செவ்வக வடிவமான கொட்டில் தேவைப்படும்.
வளர்ற குட்டிகளை வைக்கறதுக்கு 200 சதுர அடியில தனியா ரெண்டு கொட்டில், நோய் தாக்கின ஆடுகளுக்குன்னு 200 சதுர அடியில இரண்டு கொட்டில்களும் கட்டாயம் தேவைப்படும். மொத்தமா 1,450 சதுர அடி (3.32 சென்ட்) வேணும்.
தரையிலிருந்து உயரமாக பெரிய கொட்டில் மட்டும் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குற மாதிரி பாத்துக்கணும். ஆடுங்க ஏறும் போது சறுக்காம இருக்குறதுக்கு மரத்துலயே படிகள் வைக்கலாம். கொட்டிலை உயரமா அமைக்கறதுக்கு கான்கிரீட் தூண், இல்லைன்னா பனை மரத்தைப் பயன்படுத்தலாம்.
உயரம் கம்மியா இருந்தா, ஆடுகளோட கழிவுல இருந்து வெளிய வர்ற வாயுக்களால ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் வரும். சுத்தம் செய்யுறதுக்கும் கஷ்டமாப் போயிடும். சின்னச்சின்ன கொட்டில்களை தரையிலயே வெச்சுக்கலாம். எத்தனை யூனிட் அமைச்சாலும் நாலு பக்கமும் முப்பதடி இடைவெளி விட்டு, கட்டாயம் வேலி இருக்கணும். இந்த இடைவெளியில் தினமும் காலை நேரத்துல வெயில் படுற மாதிரி, ஆடுகளை மேய விடலாம். நோய், நொடிகள் வரும் போது அவற்றைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.
கொட்டிலுக்குக் கூரையா தென்னை, பனை ஓலைகளை வெச்சா, குளிர்ச்சியா இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டா, வெப்பம் அதிகமா இருக்கும். எல்லாக் கொட்டில்களுக்குமே பக்கவாட்டு அடைப்புக்கு மூங்கில் தப்பைகளையே பயன்படுத்தலாம். அடிப்பாகத்துக்கு, சாதாரண மரப்பலகையே போதுமானது.
வரிசையா மரப்பலகைகளை சீரான இடைவெளி விட்டு இணைச்சு ஆணி அடிக்கணும். பலகைகளோட இருந்தாத்தான் வளையாம இருக்கும் பலகைகளை சேக்குறதுக்கு முன்னாடி குரூட் ஆயில்ல ஊறவெச்சுட்டா.. சிறுநீர், கழிவுகளால பலகைக்கு பாதிப்பு வராது. ஊறவும் செய்யாது. இடைவெளி வழியாக் கழிவுகள் கீழே விழுந்திடும். அதனால கழிவுகளை சேகரிக்கிறதுக்கு சுலபமாயிடும்.