மக்கிய எரு தயாரிப்பின்போது இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்...

watch these properties carefully while making fertilisers
watch these properties carefully while making fertilisers


 

** குவியலின் வெப்பநிலை 10 முதல் 15 நாட்களுக்குள் அதிகமாக இருக்கும். வெப்பநிலையனாது 500 Cக்கும் குறைவானால் குவியலின் ஈரப்பதம் 60% இருக்க தண்ணீர் மூலம் ஈரமாக்கப்படுகின்றது.

** மக்கிய எருவின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறத்திற்கு மாறும்.

** மக்கிய எரு வாசனை இல்லாமல் இருக்கும்.

** மக்கிய எருவின் குவியல் மூன்றில் ஒரு பாகம் குறையும். மேலும் உறுதியாகவும் இருக்கும்.

** குவியலின் வெப்பநிலை, காற்றின் வெப்பநிலை போல் ஒரே மாதிரியாக இருக்கும்.

** முதிர்ந்த எரு அதிக கனமின்றியும், நயமாகவும் இருக்கும்.

** மக்கிய உரம் தயார் செய்ய உயரமான நிழல் உள்ள இடம் மிகவும் உகந்தது. குவியலின் ஈரப்பதத்தின் அளவை, ஈரமானி அல்லது குவியலிலிருந்து கை அளவு எருவினை எடுத்து விரல்களால் நசிப்பதன் மூலம் அளக்க முடியும். 

** மக்கிய எருவிலிருந்து அதிகமான தண்ணீர் வெளி வந்தால், பின் ஈரப்பதம் 60åக்கும் மேலாக இருக்கும் என கருதப்படுகிறது. 

** சொட்டாக, குறைவான தண்ணீர் கசிந்தால், பின் ஈரப்பதம் போதும் என கருதப்படுகிறது. அதாவது 60% உள்ளது எனலாம்.

** ஒவ்வொரு எரு குவியலும், மக்குவதற்குத் தேவையான வெப்பத்தைத் தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு டன் இருக்க வேண்டும்.

** குவியலை ஊட்டமேற்ற நுண்ணூட்டச் சத்துக்களை மக்கிய எருவுடன் கலக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios