பல்வேறு பயிர்களும் அவற்றைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்...

Various crops and ways to control the pests that attack them ...
Various crops and ways to control the pests that attack them ...


மக்காச்சோளம்...

தண்டு துளைப்பான்:

தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை விளக்குப்பொறி வைத்து கண்காணிக்கவும். தேவை ஏற்பட்டால், கார்போபியுரான் 3 ஜி 6.8 கிலோவை ஒரு ஏக்கருக்கு 20 கிலோ மணலுடன் கலந்து குருத்தில் இடவும்.

இலைக்கருகல் நோய்: 

இலைக் கருகல் நோயை மேன்கோசெப் லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் விதைத்த 20-ஆம் நாளில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பாசிப்பயறு, உளுந்து...

வெள்ளை ஈ: 

பாசிப்பயறு, உளுந்து பயிரில் தென்படும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் டைமித்தோவேட் 200 மில்லி அல்லது மிதைல் டிமட்டான் 200 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.

காய்த் துளைப்பான்: 

அசாடிரக்டீன் 0.03 சத கரைசலை ஒரு ஏக்கருக்கு 400 மில்லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும். டைமித்தோவேட் 200 மில்லி அல்லது இமாமெக்டின்பென்சோயேட் 5 சதம் எஸ்.சி. 88 கிராம் அல்லது இன்டாக்சோகார்ப் 15.8 எஸ்.சி. 133 மில்லி அல்லது வேப்பங்கொட்டை சாறு (5 சதம்) தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தக்காளி: 

இலைக் கருகல் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மான்கோசாப் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வாரம் இருமுறை தெளிக்கவும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios