வெனிலா பராமரிப்பு முறைகள்…

vanilla care-methods


காலநிலையைப் பொறுத்து தேவைக்கேற்ப கொடிகளுக்கு நீர்பாய்ச்சுவதை தொடர வேண்டும். கொடியின் தூர்பாகத்தில் போதுமான அளவில் மூடாக்கு இட வேண்டும். இதனால் வேர்கள் நன்றாக பரவ ஏதுவாகிறது.

வளர்ந்து வரும் வெனிலா கொடியைத் தாங்கு மரத்தில் ஏற்றி விட வேண்டும். பூக்கள் இன்னமும் தோன்றும். தோட்டங்களில் பூக்கள் மலர்ந்த அன்றே காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும்.

நத்தை மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். வெனிலாத் தோட்டங்களில் கோழிகள் வருவதைத் தடுக்க வேண்டும். தண்டு நுனி அழுகல் அல்லது பூங்கொத்து அழுகல் நோய் காணப்பட்டால் செடியின் மீது 0.2 சத கார்பன்டாசிம் (100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் என்ற அளவில்) தெளிப்பதால் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

நச்சுயிரி நோய் தாக்குதலின் அறிகுறி தென்பட்டதும் அந்தக் கொடியை உடனடியாக அகற்றி அழித்துவிட வேண்டும்.

அறுவடை:

காய்கள் அறுவடையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் காய்களின் நுனிப்பகுதியில் வெளிரிய மஞ்சள் நிறம் காணப்படுவது காய்கள் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும். அத்தகைய காய்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த வெனிலா காய்களை பார்பன் முறையில் பதப்படுத்தலாம். அல்லது அறுவடை செய்தவுடன் பச்சைக் காய்களாக விற்பனை செய்யலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios