இவ்வாறு வளர்த்தால் நல்ல வடிவம், ஆரோக்கியமான உருளைக்கிழங்குகளை பெறலாம்...
உருளைக்கிழங்குகளை இவ்வாறு வளர்த்தால், நல்ல வடிவம், ஆரோக்கியமான உருளைக்கிழங்குகளை பெறலாம்...
வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மண்ணானது நீரை நன்கு உறிஞ்சி, சற்று வறண்டு காணப்பட்டால், இந்த முறையை பின்பற்றலாம். அதற்கு உருளைக்கிழங்கை வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து, அது முளைகட்ட விட வேண்டும். அவ்வாறு முளைக்கட்டும் போது, அதனை இரண்டாக வெட்ட வேண்டும்.
இரண்டாக வெட்டும் போது, இரண்டு துண்டுகளிலும், இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் இருக்க வேண்டும். இதனால் விரைவில் உருளைக்கிழங்கு வளரும். பின் தோட்டத்தில், ஒரு குறிப்பிட்ட ஆழம், அகலத்தில் தோண்டி, அதில் உரம், பூச்சிக் கொல்லி போட்டு, மற்றும் அந்த உருளைக்கிழங்கையும் வைத்து மூட வேண்டும்.
பின் அந்த கண்களில் இருந்து செடி வளர்ந்து, அதன் இலைகள் ப்ரௌன் நிறத்தில் மாறும் போது, அதனை அறுவடை செய்ய வேண்டும்.
இது மற்றொரு வகையான பொதுவாக முறையாகும். இதற்கு முளைக்கட்டிய உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டவும். முக்கியமாக ஒவ்வொரு துண்டிலும், இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் இருக்க வேண்டும். இப்போது அதனை ஒரு காகிதத்தில் மடித்து, 24 மணிநேரம், லேசான ஈரப்பதமான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் தண்டுகள் ஈஸியாக வளர்ந்துவிடும்.
பின் அந்த காகிதத்தில் மக்கிய இலைகளைப் போட்டு, நன்கு மூடி, தரையில் 4 இன்ச் வரை குழிதோண்டி, அதனை வைத்து, ஒரு சிறு ஓட்டையை போட்டு, தரையில் வைத்து, மண்ணால் மூடி, தண்ணீர் ஊற்றி வரவும்.
எப்போது அது வளர்ந்து, அதன் இலைகள் ப்ரௌன் நிறத்தில் மாறி வருகிறதோ, அப்போது அதனை வெளியே எடுத்து வைத்து, 24 மணிநேரம் அதனை நீரில் தேய்ககாமல், அதில் உள்ள மண்ணை மட்டும் நீக்கிவிட்டு, பின் பயன்படுத்த வேண்டும்.