கறவை மாடுகளில் சினைத் தங்காமையை போக்க இந்தவகை தீவன மேலாண்மை உதவும்....
கறவை மாடுகளில் சினைத் தங்காமையை போக்க உதவும் தீவன மேலாண்மை
கறவை மாடுகளுக்கு கொடுக்கக்கூடிய தீவனத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தால் பசுக்கள் சினைப்பருவத்திற்கு வரும் ஆனால் சினைத்தங்காது சிலசமயம் சினைப்பருவம் வந்து வெளியில் தெரியாமல் இருக்கும்.
சத்துக்குறைவு மிக அதிகமாக இருந்தால் மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவதே நின்றுவிடும். மேலும், சினைப்பருவ சுழற்சியும் தடைபட்டுவிடும்.
தீவனத்தில் 13-20 சதவிகிதம் புரதச்சத்து இருக்க வேண்டும். எரிசக்தி மற்றும் புரதசத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சிக்குறைவு, தாமதமான பருவமடைதல், கன்று ஈன்றபின் காலம்தாழ்த்தி பருவத்திற்கு வருதல் ஆகிய பாதிப்புகள் உண்டாகலாம்.
உயிர்ச் சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் ஏ,இ, மற்றும் பாஸ்பரஸ், செம்பு, கோபால்ட், இரும்பு, துத்தநாகம், அயோடின், செலினியம் போன்ற தாது உப்புக்களின் பற்றாக்குறையால் மாடுகள் சினையாகாமல் இருக்கும்.
ஆகவே சரிவிகிதத் தீவனம் அளிக்கவேண்டும். அதாவது அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் சரிவிகிதத்தில் கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் 1.5 கிலோவும் ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
பசுந்தீவனம் (Co-1,3, வேலிமசால்) 10-15 கிலோவும், உலர் தீவனம் 5 கிலோவும், அடர்தீவனம் 1.5 கிலோவும் ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். இதைத்தவிர தாதுஉப்புகலவை ஒரு மாட்டிற்க்கு ஒரு நாளைக்கு 30 கிராமும் சினைமாட்டிற்க்கு 50 கிராமும் கொடுக்க வேண்டும்.