பண்ணை வேலைக்கு இந்தவகை மாட்டு இனங்கள் தான் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன...

This type of cow species is used in India for farm work ...
This type of cow species is used in India for farm work ...


பண்ணை வேலைக்கான இந்தியா மாட்டு இனங்கள்

1.. அம்ரித்மஹால்

** கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது. 

** உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.

2.. அல்லிகார்

** கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

3.. காங்கேயம்

** தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

** உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

அயல்நாட்டு கறவை இனங்கள்

1.. ஜெர்சி

26 – 30 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி : 13 – 14 மாதங்கள்

பால் உற்பத்தி – 5000 – 8000 கிலோ

ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 – 10 லிட்டர் பால் கொடுக்கிறது.

இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.

2.. ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்

இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.

பால் உற்பத்தி 7200 – 9000 கிலோ

பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும்.

சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர்  பால் கொடுக்கின்றன.

டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios