மாடுகள் சினை பிடிக்காமல் இருக்க இதெல்லாம் காரணமாக இருக்கலாம்...

This may be due to the cows not catching the cows ...
This may be due to the cows not catching the cows ...


கறவை மாடுகள் சினை பிடிக்காமல் இருப்பது என்பது மாடு வளர்க்கும் அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகும். 

பால் வற்றிய காலத்தில் சினையில்லா பசுவிற்கு தீவனம் அளிப்பது பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கும். இப்பொருளாதார நஷ்டத்தைத் தவிர்க்க, மாடு சினை பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களையும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

சினை பிடிக்காததற்கான காரணங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. பராமரிப்பு முறைகளில் உள்ள குறைபாடுகள்

தீவன பற்றாக்குறை (குறிப்பாக தாது உப்புக்கள்) அறிகுறி இல்லாத பருவம் (பருவத்திற்கான அறிகுறிகளைக் காட்டாமலே மாடுபருவத்திற்கு வந்து போவது) பருவத்தைக் கண்டறியாமல் தவறி விடுவது.சரியான நேரத்தில் சினை ஊசிபோடாதது.

2. இயற்கையான குறைகள்

இனப்பெருக்க உறுப்பில் நோய் / புண் அல்லது கட்டி இருந்தால், கன்றுவீச்சு / கருச்சிதைவு நோய் இருந்தால், ஹார்மோன் கோளாறுகள், மரபியல் கோளாறுகள் மற்றும் கடந்த முறைகன்று ஈன்றதில் கோளாறுகள்.

3. விந்து மற்றும் சினை ஊசி போடுவதில் உள்ளகுறைபாடுகள்

சரியான நேரத்தில் சினை ஊசி போடாதது. சரியான முறையில் சினை ஊசி போடாதது. நோய் வாய்ப்ப ட் ட காளைகளுடன் இனச் சேர்க்கை செய்வது. மூன்று முறைசினை ஊசி போட்டும் மாடு சினை பிடிக்காமல் இருப்பதன் மூலமும், சுமார் 21 நாட்களுக்கு ஒரு முறை வலும்புக்கு வராமல் இருப்பதன் மூலமும், மாடு சினை பிடிக்காமையைத்தெரிந்துகொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios