தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர இவைகளும் காரணமாக இருக்கலாம்...
தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர இவைகளும் காரணமாக இருக்கலாம்...
அ) நீர் தேங்கி நிற்கும் இளந்தென்னந்தோப்புகளில் மேலாண்மை
இளந்தென்னங்கன்றுகள் நடப்பட்ட இரு வரிசைகளுக்கிடையே பருவமழை தொடங்கும் பருவத்தில் ஒரு நீண்ட குழி அமைக்கவேண்டும். குழியின் அளவு மூன்று மீட்டர் அகலமும், 30-45 செ.மீ ஆழமும் உள்ளபடி வயலின் முழு நீளத்திற்கு அமைக்கவேண்டும்.
இதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கன்றுகள் நட்பபட்ட வரிசைகளிலே ஒரு மேடான பாத்தி உருவாகும்படி போடவேண்டும்.
இளங்கன்றுகளை சுற்றிலும் 1.2 மீட்டர் அகலமும் 30-45 லிட்டர் உயரமும் கொண்ட மணற்குன்றுகளை அமைக்கவேண்டும்.
ஆ) மரபியல் காரணங்கள்
சில மரங்களில் போதுமான உர, நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தபோதிலும் குரும்பை உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கும்.இது விதைத் தேங்காய் எடுக்கப்பட்ட விதை மரத்தின் வழியே வந்த குறைபாட்டின் அறிகுறியாகும்.
ஒன்று போல நல்ல மகசூலை தரும் மரங்கள் கிடைக்க விதைக்காய்களுக்கு தரமான விதை மரத்தை தெரிவு செய்யவேண்டும் என்ற தேவையை இது உணர்த்தும்.