Asianet News TamilAsianet News Tamil

உலகளவில் மீன்களுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு இதெல்லாம்தான் காரணம்...

This is the reason for the growing demand for fish worldwide ...
This is the reason for the growing demand for fish worldwide ...
Author
First Published Mar 20, 2018, 1:36 PM IST


உலகளவில் மீன்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் மீன் வளர்ப்பு தொழிலில் தாராளமாக ஈடுபடலாம். இந்த காரணங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

மீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். மீன்களில் பொதுவாக 60 – 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 – 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 – 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 – 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. 

தாது உப்புக்களைப் பொருத்த அளவில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின், கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்றவை முக்கியமானவைகள் ஆகும். 

மீன்களில் மேற்கூறப்பட்ட ஊட்டச் சத்துக்கள் தவிர வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. நமது உடல் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற தேவையான அளவில் புரதச்சத்துக்களை உணவின் மூலம் பெறுவது இன்றியமையாதது ஆகும். 

நமது புரதத் தேவையின் பெருமளவை நாம் தாவர புரதங்களில் சில இன்றியமையாக அமினோ அமிலங்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. எனவே தாவர உணவுகளிலிருந்து பெறும் புரதம் குறைபாடு கொண்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் விலங்குகளிலிருந்து பெறும் பால், முட்டை, மாமிசம், போன்ற உணவுகளில் உள்ள புரதங்களில் தாவரப்புரதங்களில் காணப்படும் குறைபாடுகள் இருப்பதில்லை. 

எனவே, நமது உணவில் தேவையான அளவில் மாமிசப் புரதங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது புரதச்சத்து தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிப்பதில் மீன்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. 

பொதுவாக பிற மாமிசங்களின் விலைகளை ஒப்பிடும் போது மீன்களின் விலை குறைவாகவே உள்ளதால் உலகளவில் மலிவான விலையில் தரமான மாமிசப் புரதத்தை அளிக்கும் உணவாக மீன்கள் கருதப்படுகின்றன.

கொழுப்புச்சத்து உணவிற்கு சுவையையும், நமது உடலுக்கு சக்தியையும் அளிக்கக்கூடிய உணவாக இருப்பினும், ஆடு மற்றும் மாடுகளின் இறைச்சியில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டீரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு நிறைய உள்ளது. எனவே இவ்வகை இறைச்சிகளை உண்ணும் போது மாரடைப்பு மற்றும் பலவகை இதய நோய்கள் ஏற்படுகின்றன. 

மாறாக மீன்களின் இறைச்சியில் உள்ள கொழுப்புகளில் நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் இல்லை. இவ்வாறாக மீன்கள் நமக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத தன்மையும் கொண்டுள்ளதால் அவை சிறந்த ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகின்றன. 

பிறவகை மாமிச உணவுகளோடு ஒப்பிடும்போது எளிதாக செரிமானமாகும் தன்மையும் கொண்டுள்ளதால் மீன்கள் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிறந்த ஆரோக்கிய உணவாகும். 

பல்வேறு ஆராய்ச்சிகளும் மருத்துவக் கண்டுபிடிப்புகளும் மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. எனவே உலகளவில் மீன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios