கறவை மாட்டு இனங்களை இப்படிதான் தேர்வு செய்யணும்...
கறவை மாட்டு இனங்களை தேர்வு செய்வதற்கான வழிகள்:
** கறவை மாடுகளின் தேர்வுகறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
** மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.
** மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.
** கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது. எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.
** தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.
** யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.
** அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.
** ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.