தர்பூசணியை அதிகம் தாக்கும் பூச்சிகளில் இதற்குதான் முதலிடம்; தீர்வு உள்ளே...
தர்பூசணியை அதிகம் தாக்கும் பூச்சிகளில் அசு உணி பூச்சிக்குதான் முதலிடம்.
அறிகுறிகள்
குஞ்சுகளும் அசு உணியும் சாற்றை உறிஞ்சிவிடுகின்றன. இதனால் இலைகள் பச்சையம் இல்லாமல் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
அசு உணியால் பாதிக்கப்பட்ட தர்பூசணியின் இலைகள் கீழ்நோக்கி குழிவாகக் காணப்படும்.
செடிகள் வளர்ச்சி குன்றியும், இலைகள் சுருங்கியும் காணப்படும். நாளடைவில் இலைகள் வாடி உலர்ந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
தர்பூசணி பழத்தை அறுவடை செய்த பின் அசுவினி பூச்சிகள் தாக்கிய செடிகளை அகற்ற வேண்டும்.
ஒரு எக்டருக்கு 12 மஞ்சள் நிற ஒட்டும் பொறியை வைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
வாரத்திற்கு ஒரு முறை மஞ்சள் நிற ஒட்டும் பொறியை இடம் மாற்றி சுத்தம் செய்து உபயோகித்தால் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கலாம்.
டைமீதோயேட் 30 இசி 2 மில்லி / லிட்டர் அல்லது மீத்தைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி லிட்டர் அல்லது என்டோசல்பான் 36 இசி 2 மில்லி / லிட்டர் தண்ணீருடன் கலந்து 25, 40 மற்றும் 55-வது நாட்களில் பயன்படுத்துவதன் மூலம் அசு உணியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.