குளிர்காலத்தில் நாட்டுக் கோழிகளை பராமரிக்கும் முறை:

சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். 


ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். 

கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது,எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகிகெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்புஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 

இதன் விளை வாககோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சிகுன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டு கிளறிவிடுவதுநல்லது. 

முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப் பிறகு 10 செ.மீ.உயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவை கிளறிவிட வேண்டும்.

100 கோழிகளுக்கு சுமார் 25 லிட்டர் குடிநீர் தேவைப் படும். இளம் கோழிக் குஞ்சு களுக்கு முக்கிய மான எதிரிஅசுத்த மான தண்ணீர் ஆகும். இளம் குஞ்சுகளின் ஆரம்பகால இறப்பு நல்ல குடிநீரை உபயோகப் படுத்தாததினால் ஏற்படுகிறது. 

ஆகவே சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து குடிநீரை எடுக்கிறோமோ அந்தஇடத்தில் எந்தவித கலப்படமும் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக சாக்கடை கலப்படம் அல்லது தொழிற்சாலைகழிவு கலக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

 ஆழ்கிணறு நீராக இருந்தால் கொதிக்க வைக்காமல்அப்படியே நன்கு உபயோகிக்கலாம். அதே சமயம் கிணற்று நீராக இருந்தால் அதனை நன்கு கொதிக்க வைத்துஆறவைத்து கொடுப்பது நல்லது. தரமான பிளீச்சிங் பவுடரை ஆயிரம் லிட்டருக்கு 4 முதல் 7 கிராம் என்ற அளவில்தண்ணீர் அளிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பு கலந்து அவ்வித நீரை கோழிகளுக்கு அளிக்கலாம்.

கிணறுகளில் பிளீச்சிங் தூள் போடவேண்டுமென்றால் ஒரு கன அடி நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும்.குடிநீரை செம்பு, பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில வைத்திருந்து பின்னர் உபயோகப் படுத்தினால் குடிநீர்குளிர்ந்த நிலையில் இருக்காது. இளம் வயது குஞ்சுகளுக்கு, சிறிதளவு தண்ணீர் வெதுவெதுப் பான நிலையில் அளிக்கவேண்டும். 

குறிப்பாக இரவு நேரங்களில் அதிக குளிர் காரணமாக குடிநீர் குளிர்ந்து விடுவதால் அதை மாற்றிவெதுவெதுப்பான குடிநீர் அளித்திட வேண்டும். அதேபோல் காலையில் குடிநீர் மாற்றும் பொழுதும் புதிதாய்க் கொதித்துஆறிய வெது வெதுப்பான குடிநீரையே அளிக்க வேண்டும். காலையில் சில நேரங்களில் எட்டு மணி வரையிலும் குளிர்இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

இல்லாவிட்டால் குஞ்சுகள் அதிக அளவில் இறக்க நேரிடும். இளம்குஞ்சுகளுக்கு கொடுக்கப்படும் செயற்கை வெப்பத்தின் கால அளவை குளிர்காலங்களில் மேலும் இரட்டிப்பாக்கி 2வாரங்கள் கொடுக்க வேண்டும். அதே போல அடைகாப்பானின் மேல் உள்ள மின்சார பல்பின் வாட் அளவை குஞ்சுகளின்தேவைக் கேற்ப அதிகப்படுத்த வேண்டும். 

மின்சார பல்பின் உயரத்தையும் குஞ்சுகளின் நிலையை அறிந்து கூட்டவோ,குறைக்கவோ செய்ய வேண்டும். வீட்டின் இரு பக்கங்களிலும் கோணிப்பைகளை திரையாக்கி சாரல் மற்றும் பனி உள்ளேவராமல் இரவு முழுவதும் தொங்கவிட வேண்டும். அதிக சக்தி வாய்ந்த மின் விளக்குகளை இரவு முழுவதும் எரியவிடவேண்டும். 

மேற்கூறிய முறைகளை முறையாக பின்பற்றினால் குளிர்காலத் தில் கோழிப்பண்ணை களில் எவ்விதபாதிப்பும் இல்லா மல் பண்ணையை மேம்படுத்தலாம்.