ஆடுகள் ஆரோக்கியமாக வளர இந்த மூன்று விஷயங்களையும் கட்டாயம் செய்யணும்...
1.. காயடித்தல்
இனப்பெருக்கத்திற்குத் தேவையில்லாத கிடாக்களை காயடித்து விடலாம். கிடாக்களை காயடிக்கும் சரியான வயது 4-6 மாதங்கள் ஆகும். பர்டிஸோ கருவி என்ற கருவி மூலம் காயடித்தால் நோய்த் தொற்று அபாயங்கள் குறையும்.
பயன்கள்
1. இறைச்சியின் சுவை அதிகமாக இருக்கும்.
2. உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.
3. ஆட்டுத் தோலின் தரம் உயர் மதிப்புக் கொண்டதாக இருக்கும்.
4. அமைதியாக இருக்கும்.
2.. நகங்களை வெட்டுதல்
ஆடுகளின் சிறந்த பராமரிப்பிற்கு நகங்களை நன்கு வெட்டுதல் வேண்டும். இல்லையெனில் நகம் பெரிதாக வளர்ந்து, காலை பலகீனப்படுத்தும். 30 நாட்கள் இடைவெளியில் கூரிய கத்தி, அல்லது கத்தரிக்கோல் வைத்து நறுக்கி விடுதல் வேண்டும்.
3.. பயிற்சி
ஆடுகள் ஆரோக்கியமாக வளர அவைகளுக்குப் பயிற்சி அவசியம். கொட்டிலில் அடைத்து அல்லது கட்டி வளர்க்கப்படும் ஆடுகள் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரமாவது திறந்த வெளியில் திரிய அனுமதிக்கவேண்டும்.
திறந்த வெளி எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவு பயிற்சிக்கு ஏற்றது. பனித்துளி இருக்கும் போதும், சூரியன் மறைந்து இரண்டு மணி நேரத்திற்குப் பின்பும் மேய விடுதல் கூடாது. ஈரமான புற்களில் மேயும் போது குடல் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு