இந்த மூன்று பிரச்சனைகள் கூட உட்புற ஒட்டுணிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும்?
1.. டிரிகோமோனியாசிஸ்
டிரிக்கோமோனாஸ் ஃபீட்டஸ் என்னும் புரோட்டோசோவாவினால் தோற்றுவிக்கப்படும் இந்நோய், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது மாடு மற்றும் காளையின் இனப்பெருக்க உறுப்பில் மட்டுமே காணப்படுகிறது.
இந்த உயிரியானது காளையிடமிருந்து பசுவின் யோனிக்குழாயை அடைந்து பின்பு கருப்பைக்கு இடம் பெயர்கிறது. பாதிப்பு ஆரம்பித்தவுடன் ஒரு வெள்ளை நிறத் திரவம் பசுவின் இனப்பெருக்கப் பகுதியிலிருந்து வடிகிறது.
90 சதவிகிதம் மாடுகளுக்கு எளிதில் பரவக்கூடியது. கலப்பு பயனின்றிப் போவதால், சினையாக முடியாத தன்மை ஏற்படும். இதற்கென எந்த தடுப்பூசியும் கிடையாது. ஆனால் செயற்றைக் கருத்தரிப்பின் மூலம் இது பரவுவதைத் தடுக்கலாம்.
காளைகளை கலப்பிற்கப் பயன்படுத்தும் முன்பு நன்கு பரிசோதிக்கவேண்டும். இது காளையினால் பரவுவதாகையால் ஒரு முறை பாதித்தால் அது கடைசி வரை காளைக்குள்ளேயே தங்கிவிடும்.
2.. விப்ரியோ கருச்சிதைவு நோய்
கருவைக் கலைக்கம் மற்றொரு நோய் விப்ரியொசிஸ் ஆகும். இதுவும் காளையிடமிருந்து கலப்பின் போது பசுவிற்குப் பரவி அதை மலடாக்குகிறது. இதற்குத் தடுப்பு மருந்து உள்ள போதிலும், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்நோயுள்ள காளையுடன் கலப்பு செய்யப்படும், தடுப்பூசி கொடுக்கப்படாத மாடுகள் மலட்டுத்தன்மை அடைகின்றன.
இதில் பசுவின் யோனிக் குழாய், கருப்பை பாதிக்கப்படலாம். ஆனால் வெளியில் அறிகுறிகள் இருக்காது. பாதிக்கப்பட்ட பசு கருத்தரித்தாலும் 5-6 மாதங்களில் கருவானது சிதைந்து பிறந்து விடும். இதன் பின்பே பசு பாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடியும்.
எனினும் 1 வருடத்தில் மீண்டும் பசு குணமாகிவிடும். 2 தடுப்பூசிகள் போடப்படவேண்டும். அதுவும் கலப்பிற்கு 4 வாரங்கள் முன்பு லெப்டோஸ்பைரோசிஸின் தடுப்பு மருந்துடன் கலந்து கொடுக்கலாம்.
செயற்கைக் கருத்தரிப்பு முறையும் இந்நோய்க்கு ஏற்ற மாற்று ஆகும். ஆனால் அதன் விந்துக்கள் விப்ரியோஸ் மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ், டிரைக்கோமோனியாஸிஸ் பரிசோதனைக்கு உட்பட்டிருக்கவேண்டும்.
3.. மருக்கள்
பாப்பிலோமாவைரஸ் என்னும் வைரஸ் நோயை ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. இது இளம் கன்றுகள் 1-2 வயதுள்ள கன்றுகளை பாதிக்கிறது. நோய் தோன்றி 1-6 மாதங்கள் கழித்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
பொதுவாக இந்த மருக்கள் விலங்குகளுக்கு ஒரு அருவருப்பான தோற்றத்தைத் தரும். இது தானாகவே சுருங்கி சில மாதங்களில் விழுந்து விடும். அல்லது வீடுகளில் பழங்காலத்திலிருந்து செய்வது போல் ஏதேனும் எண்ணெய், பிரஷ் கொண்டு தேய்த்தாலும் போய்விடும். கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றை வைத்தும் நீக்கலாம்.
இந்த மரு அதிக அளவு பரவிவிட்டால் இந்தக் காயங்களில் இருந்து எடுத்த மருந்தில் தடுப்பூசி அளிக்கலாம்.