கரும்பு பயிருக்கு இந்த பூச்சிகள்தாம் முதல் எதிரி... தடுக்கும் வழிகள் உள்ளே...
கரும்பு பயிருக்கு நுனிக் குருத்துப் புழு, தண்டுப் புழு போன்றவை தான் முதல் எதிரி. இவற்றைக் கட்டுப்படுத்தினாலே 90 சதவீதத்துக்கு மேல் மகசூல் பெற முடியும்.
இதைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தால் மண் வளம் பாதிக்கப்படும். இதைத் தவிர்த்துவிட்டு, பாதிப்புகளை உண்டாக்கும் புழுக்களை இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும்.
கார்சீரா எனும் பூச்சிகள் மூலம் டிரைகோகிரம்மாஜப்பானி என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் பூச்சியிலிருந்து ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும் நுண்ணிய முட்டை கிடைக்கிறது.
இந்த முட்டை ஒரு சி.சி. என்று அழைக்கப்படும். ஏழுக்கு 10 என்ற சதுர சென்டிமீட்டர் கொண்ட ஓர் அட்டையில், 15 ஆயிரம் நுண்ணிய முட்டைகளை ஒட்டி கரும்பு நடவு செய்த நான்கு மாதங்களிலிருந்து 15 நாட்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை ஒட்ட வேண்டும்.
மூன்று சிசி அட்டைகளைக் கரும்பு சோகைக்கு இடையில் கட்டிவிட்டால், அந்த முட்டைகள் ஒட்டுண்ணிப் பூச்சிகளை உருவாக்கிப் புழுக்களைத் தின்று, எஞ்சிய புழுக்களின் உடலில் தன்னுடைய முட்டைகளை இட்டுவிட்டுச் சென்று விடும். இதனால் புழுக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.