கால்நடைகளுக்கு உட்புற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களையும் தெரிஞ்சுக்குங்க..

These diseases will come by inside bacteria
These diseases will come by inside bacteria


 

உட்புற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள்

1.. ஜோனீஸ் கழிச்சல் நோய் 

இது ‘யோநீஸ் நோய்’ என்றும் ‘பாராடியூபர்குளோசிஸ் நோய்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளாசிஸ்என்னும் பாக்டீரியவினால் வயதான மாடுகள், ஆடுகள், மான், காட்டெருமை மற்றும் சில விலங்களுகளில் தோற்றுவிக்கப்படுகிறது.

இந்த ஜான்ஸ் நோயானது இளம் கள்றுகளிலேயே தோன்றிவிட்டாலும் அதன் உணவு செரிமானக் குழலில் தங்கிவிடுகிறது. இதன் அறிகுறிகள் 2-5 வயது ஆன மாடுகளிடமே வெளிப்படும். அதிக எடையிழப்பு, வயிற்றுப்போக்கு, பால் அளவு குறைவு போன்றவை இதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட கால்நடை நிறைய தீவனம் எடுக்கும். 

நல்ல தோற்றத்துடன் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இந்நோய் தாக்கினால் பின்பு குணப்படுத்த இயலாது. இதை ஆரம்பத்திலேயே கண்டுணர முடியாததால் சிகிச்சையளிக்க முடியாது. நல்ல கால்நடை மருத்துவர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையிலிருந்து அகற்றி பிற மாடுகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். இது பொதுவாக அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.

2.. லெப்டோநோய்

இந்நோய் லெப்டோஸ்பைரா பொமோனா என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. சினை மாடுகளில் இந்நோயால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறது. மஞ்சள் நிறத் திரவமும், இரத்தம் கலந்த சிறுநீரும் இதன் அறிகுறிகள் ஆனால் இது அவ்வப்போது மட்டுமே வெளிப்படும். 

இந்நோய் பாதித்த மாட்டின் பால் கெட்டியாகவும், இரத்தத் துளி கலந்தது போல் இருக்கும். பாதிக்கப்பட்ட 2 வாரங்களில் 7 மாத வயதில் கருச்சிதைவு ஏற்படுகிறது. இரத்தப் பரிசோதனை மூலம் இந்நோய் இருப்பதை அறியலாம்.

சினைப் பருவத்திற்கு 30-60 நாட்கள் முன்பு தடுப்பூசி போடுதல் வேண்டும். ்விப்ரியோசிஸ்் தடுப்பூசிகள் இந்நோய்க்கு சிறந்த தடுப்பான்.

3.. கழல் நோய்

இந்நோய் கண்ட மாடுகளில் காய்ச்சல் அதிகமாக இருக்கும். கருச்சிதைவு 7-9 மாதத்தில் நிகழும். நஞ்சுக் கொடி எளிதில் விழாது. இதுலிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்னும் பாக்டீரியத்தினால் ஏற்படுகிறது. இந்த உயிரி மண், சாணம், புல் போன்ற எல்லா இடங்களிலும் இருக்கும். 

இந்த உயிரி மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. கால்நடை மட்டுமின்றி ஆடுகள், பன்றி, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிலும் ஏற்படுகிறது. அமைதியின்மை பசியின்மை, மிகுந்த காய்ச்சல் போன்றவை சுற்றிச்சுற்றி வருவதால் இது ‘சுற்று நோய் எனப்படுகிறது. 

அறிகுறிகள் தெரிந்த 2-3 நாட்களுக்குப்பின் பாதிக்கப்பட்ட விலங்கு இறந்து விடும். கால்நடையாயின் 2 வாரங்கள் வரை உயிர் வாழும்.

கொட்டகைகளில் மாடுகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். செலேஜ் (பதப்படுத்தப்பட்ட) தீவனம் அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். 

நல்ல எதிர்ப்புச் சக்தி உள்ள ஆரோக்கியமான மாடுகள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துக் குணப்படுத்தவேண்டும்.

4.. தொடை வீக்க நோய்

இந்நோய் ஏக்டினோமைசில் போவிஸ் என்ற உயிரியால் பரவுகிறது. இது பெரிய நகர்த்த முடியாத அளவு கட்டியை மாடுகளின் தொடையில் உருவாக்குகிறது. செம்புல் போன்ற புற்கள் உண்ணும் போது, அவை மாடுகளின் வாய் ஓரங்களில் சிறிது கிழித்துவிடுகிறது. 

இந்த இடுக்கு வழியே இவ்வுயிரி புகுந்து விடுகிறது. இந்தக் கட்டி பெரிதாகி தெரியுமளவு வர சில மாதங்களாகும். இதற்குள் இது சற்று முதிர்ந்து விடும். இந்தக் கட்டியில் மஞ்சள் நிற சீழ் போன்ற திரவம் எலும்பு இடுக்குகளில் தேங்கும். கவனிக்காவிடில் கட்டி பெரிதாகி உடைந்து அதிலிருந்து மஞ்சள் நிற சீழ் வெளிவர ஆரம்பித்துவிடும்.

நாசி எலும்புகளை பாதிப்பதால் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும். மெல்வதற்குக் கடினமாக இருப்பதால் மாடு உணவு உட்கொள்ளாது. இதற்குப் பயன்படுத்தப்படுவது அயோடின் முறை டெட்ராசைக்ளின். கட்டி ஏற்பட்டால் உடனே கால்நடை நல்ல நிலையிலிருந்தாலும் உடனே மந்தையிலிருந்து அகற்றி, தனியே வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையெனில், கட்டி உடலின் பிற பாகங்களுக்குப் பரவ ஆரம்பித்து விடும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios