பருத்தி சாகுபடியில் மகசூலை அதிகரிக்க இப்படியொரு வழி இருக்கு...
மானாவாரி பருத்தி சாகுபடியில் மகசூலை அதிகரிக்கும் வழிகள்...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக்கலவை ரகங்களுக்கு ஹெக்டேருக்கு 7.5 கிலோ மற்றும் பி.டி பருத்தி ஹெக்டேருக்கு 10 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும்.
மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பி.ஜி.ஆர் இலைத் தயாரிப்பு 1.5 அடர்வு காய் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனுடன் பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்து அளிப்பதன் மூலம் மகசூல் அதிகரிக்கும், இலைகள் சிவப்பாகுதல் குறையும்.
பஞ்சு நீக்கிய விதைகள் ஹெக்டேருக்கு 15 கிலோவும், பஞ்சு நீக்கப்படாத விதைகள் 20 கிலோவும் தேவை. ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு பயிரிடுவதாக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ தேவை.
தட்டைப் பயறுடன் பயிரிடுவதாக இருந்தால் 7.5 கிலோ போதும். நிலத்தை நன்றாக உழுதபின் 150 செமீ அகலத்துக்கு மேட்டுப் பாத்திகள் அமைத்து அதன் பக்கவாட்டில் 30 செமீ அகலமும் 30-க்கு 60 செமீ ஆழமும் உள்ள சால்களை அமைக்கவேண்டும்.
இதன்மூலம் மண்ணின் ஈரம் அதிக காலம் பராமரிக்கப்பட்டு பயிர் செழித்து வளர ஏதுவாகிறது. இல்லையெனில், சாதாரண சால் முறையைக் கடைப்பிடிப்பது சிறந்தது. விதை நேர்த்தி, இறவைப் பயிருக்கு செய்ததுபோலவே மானாவாரிப் பயிருக்கு செய்யவேண்டியது அவசியம்.