இயற்கை வேளாண்மையின் முக்கியமான குணங்கள்…
ஒரு பகுதியில் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல மூலாதாரங்களை உபயோகப்படுத்துதல்.
உயிராதாரங்களின் உற்பத்தித் திறன் மற்றும் சூரிய ஒளியினை முறையாகப் பயன்படுத்துதல்.
மண்ணின் வளத்தினை பராமரித்தல்.
தாவர மற்றும் கரிம சத்துகளை அதிகபட்சமாக மறுசுழற்சி செய்தல்.
இயற்கைக்கு மாறான பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ உபயோகப்படுத்தாமல் இருத்தல் (உதாரணமாக வேதியில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்).
விவசாய நில உபயோகம் மற்றும் உற்பத்தி முறையில் பல்லுயிர் பெருக்க முறைகளை உபயோகித்தல்.
பண்ணை விலங்குகளை அவற்றின் சுற்றுப்புற வேலைகளுக்கேற்ப அவற்றினை பராமரித்தல் மற்றும் அவற்றின் இயற்கையான குணநலன்களை அனுமதித்தல்.
இயற்கை வேளாண்மையானது சுற்றுப்புற சூழ்நிலையுடன் இயைந்த உற்பத்தி முறையாகும்.
இம்முறை வேளாண்மையானது சிறிய விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை தரவல்லது.
இயற்கை வேளாண்மை மூலம் வறுமையினை ஒழிக்கவும், உணவுப்பாதுகாப்பினையும் கீழ்க்கண்ட செயல்முறைகளின் மூலம் உதவுகிறது.
குறைந்த வேளாண் இடுபொருள் உபயோகப்படுத்தும் இடங்களில் விளைச்சலை அதிகப்படுத்துதல்.
புவியில் வாழும் பல்வேறு உயிர்களை பாதுகாக்கவும், பண்ணையிலுள்ள மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை மூலாதாரங்களை பாதுகாத்தல்.
உற்பத்தி செலவினை குறைத்து வருமானத்தினை அதிகப்படுத்துதல்.
பாதுகாப்பான, பல்வேறு விதமான உணவுகளை உற்பத்தி செய்தல்.
நீண்ட நாட்களுக்கு வேளாண் உற்பத்தியினை பராமரித்தல்