பானகம் தயாரிக்க எளிதான முறைகள்…

the easiest-method-to-produce-the-syrup


மதுரை மனையியல் கல்லூரியில் விவசாயிகள், தொழில் முனைவோருக்கு புளி பானகம், அடர் கரும்புச்சாறு, சப்போட்டா சாறு எடுக்கும் தொழில் நுட்பம் கற்றுத்தரப்படுகிறது.

இதுகுறித்து மனையியல் கல்லூரி உணவியல் மற்றும் சத்தியல் துறைத்தலைவர் காஞ்சனா கூறியது:

"விளைச்சலோடு விவசாயிகள் நின்றுவிடாமல் அதை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தனியாக செய்யாமல் குழுவாக சேர்ந்து தொழில்நுட்பத்திற்கு மாறினால் விளைபொருளுக்கு விலை கிடைக்காத காலத்தில் அவற்றை மதிப்பு கூட்டலாம்.

தொழில்முனைவோர்களும் இதை பயன்படுத்தலாம். இதற்கான கருவிகள் கல்லூரியில் உள்ளன. அவற்றை வாடகை முறையில் பயன்படுத்தலாம்.
ஆலைக் கரும்புச்சாற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. அதை இரண்டடுக்கு பாத்திரத்தில் ஊற்றி மூன்றில் ஒரு பங்காகும் வரை நீராவி மூலம் பாகாக காய்ச்ச வேண்டும். இதை நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம்.

பொரி உருண்டை, அதிரசம், கடலை மிட்டாய், கேக், பிஸ்கெட்டில் இச்சாறை சேர்த்தால் மணமும் சுவையும் அதிகமாக இருக்கும். பாட்டிலில் சேகரித்து வைக்கலாம்.
புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு  சர்க்கரை, சுக்கு சேர்த்து காய்ச்சி வடிகட்ட வேண்டும். சோடியம் பென்சோயேட்டை “பிரிசர்வேடிவ்’ ஆக பயன்படுத்தலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios