செயற்கை பூச்சிக் கொல்லியின் விபரீதங்கள்…
நிலத்துக்காரர் ஒருவர் நெல் வயலுக்கு பூச்சிக்கொல்லியை தெளித்திருக்கிறார். மருந்துதெளித்த வயலில் பூச்சிகளை கொத்தித்தின்ற இந்த பால்குருவிகள் ஆங்காங்கே மயக்கமாகவும் இறந்தும் கிடந்தது.
கண்ணுக்கு தெரிந்த பறவைகளே இத்தனை இறந்து கிடக்கிறது என்றால், இன்னும் ஈ, எறும்பு, புழு, பூச்சி, தட்டான், வண்டு, இதுபோன்று எவ்வளவு இறந்து இருக்கும்?
இந்த பழங்களையும், காய்கறிகளியும் தான் நாமும் உண்கிறோம். இவை அனைத்தும் உடனே நம்மைக் கொள்ளாவிட்டாலும், நிச்சயம் ஒருநாள் நம்மைக் கொல்லும்.
அல்லது, இதன் பக்கவிளைவுகள் நம்மை மட்டுமன்றி நம் பரம்பரையையே நாசமாக்கும்.
பூச்சிக்கொல்லிகளை பற்றி இந்த மக்களுக்கு நாம் எவ்வளவு சொன்னாலும் அவர்களின் வறுமையும், ஆசையும், அறியாமையும் அவர்களை இந்த வழிக்கு அழைத்துச் செல்கிறது...
நியாபகமிருக்கட்டும் இறந்துகிடக்கும் பறவைகள் மனித மரணத்தின் கட்டியங்கூறிகள்.