மரவள்ளி கிழங்கு சாகுபடி…
ஊர் பக்கம் குச்சி கிழங்கு என்று அழைக்கப்படும் மரவள்ளி கிழங்கு போன வருடம் ஒரு ஏக்கர் நட்டோம், நடவு மற்றும் குச்சி செலவு ஒரு 7000 ஆயிருக்கும் பின்பு ஒரு மாதத்தில் களை எடுப்பு செலவு ஒரு 5000. மற்ற செலவு ஒரு 5000. மொத்தம் ஒரு 17 ஆயிரம் செலவு ஆயிருக்கும் என்று ஆரம்பித்தார் சண்முகம்.
நட்ட ஒரு ஏக்கரில் பதிக்கு பாதி சித்திரை வெயிலை தாக்கு புடிக்க முடியாமல் கருகி விட்டது. மிச்சம் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த செடி ரளவு நல்ல விளைச்சலை தந்தது.
ஒரு அறுபது மூட்டை கிழங்கு வந்தது. இந்த வருடம் கிழங்கு விலை வானளவு உயர்ந்ததால் ஓரளவு நல்ல வரும்மானம். (53,000/-). குச்சி ஒரு 3000 ரூபாய்க்கு விற்றாகிவிட்டது.
குறைந்த செல்வில் நல்ல வருமானம், மேட்டு பண்ணையம். பராமரிப்பு கம்மி, நீர் மேலாண்மை தேவை இல்லை.
நாங்கள் மீண்டும் ஒரு 5 ஏக்கர் நட உள்ளோம், முடிந்தால் இந்த வருடம் நீங்களும் நட்டு பாருங்களேன். நல்ல இலாபம் வரும்க என்றார்.