மண் வளத்தை மேம்படுத்த இப்படியொரு உத்தி இருக்கு... மிகவும் பயனுள்ளதும் கூட...
மண் வளம் மேம்படுத்த...
பல வகை தானிய பயிர்கள்...
1.. தானியப்பயிர் 4
சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ
2.. பயிறு வகை 4
உளுந்து 1 கிலோ
பாசிப்பயறு 1 கிலோ
தட்டைப்பயிறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ
3.. பசுந்தாள் பயிர்கள் 4
தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பை 2 கிலோ
நரிப்பயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ
4.. மணப்பயிர்கள் 4
கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ
இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.
இந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் .
இது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் காக்க படும் . இதனை கலந்து விதைக்கலாம் .
நவ தானியங்கள் விதைப்பு நமது பரம்பரியமுறை . எடுத்துக்காட்டு நமது முளைப்பாரி திருவிழா . மேலும் இது இரு அருமையான பசுந்தாள் உரமும் ஆகும் . இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திக்கு உண்டானது .