நெல் சாகுபடியில் நீர்ப்பாசனத்தை சிக்கனமாக பயன்படுத்த சில வழிகள்…
1.. பொதுவாக மண் மேல் நீரை தேக்கி வைக்காமல் ஆனால் மண் ஈரமாக இருக்குமாறு செய்ய வேண்டும்.
2.. நட்டதிலிருந்து தண்டு உருளும் பருவம் வரை 2.5 செ.மீ உயரத்திற்கு நீரைக்கட்டி பின் அது வடிந்து லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன் மறுபடியும் 3.5 செ.மீ உயரத்திற்கு நீரைப்பாய்ச்சுதல் வேண்டும்.
3.. தண்டு உருளும் பருவத்திற்கு பின் 2.5 செ.மீ உயரத்திற்கு நீரைக்கட்டி பின் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் மறைந்தவுடன் மறுபடியும் 2.5 செ.மீ உயரத்திற்கு நீரைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.. காய்ச்சலும், பாய்ச்சலும் போன்ற இந்த நீர்ப்பாசன முறையால் மண்ணில் காற்றோட்டம் இருக்கும்.
5.. செம்மை நெல் சாகுபடியில் நீர் சேமிப்பு 49.4 சதவீதம்.
6.. வேர்களின் பணியும்,நுண்ணுயிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும்.
7.. பூப்பருவத்தில் இருந்து அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன்பு வரை லேசான தண்ணீர் (1-2 செ.மீ) தேங்கி இருக்குமாறு செய்தல் போதுமானது.