விவசாயத்தில் சில சந்தேகங்களும், அதற்கான தீர்வுகளும்…
1.. தென்னையில் ஈரியோபைட் சிலந்திக்கு என்ன இயற்கை வைத்தியம்?
தென்னைக்கு வட்டப்பாத்தி கட்டித் தண்ணீர் விடுங்கள். உங்கள் தோப்பில் மண்புழு உர உற்பத்தி தொடங்குங்கள். ஒரு மரத்துக்கு 50 கிலோ மண்புழு உரம், பாய்ச்சல் நீரில் அல்லது வட்டப்பாத்தியில் 3 சதவீதம் பஞ்சகவ்யம், 2சதவீதம் வராக குணபம் மாறி மாறி விடவும். ஈரியோபைட் ஓடிவிடும்.
2.. நெல்பயிர் இலைகள் சிவந்து காய்வதை தடுக்க என்ன வழிகள்?
நெல்நாற்று நடவு செய்து 30 நாட்கள் ஆகிறது. பயிர்கள் இலைகள் சிவந்து காய்ந்து விடுகிறது இதற்கு என்ன செய்வது? இம்மாதிரியான பயிரில் துத்தநாக பற்றாக்குறை உள்ளது. இதற்கு ஏக்கருக்கு 40 கிலோ சாணத்துடன் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் முழுவது வைத்திருந்து மறுநாள் 100 லிட்டர் தண்ணிரில் கரைத்து வடிகட்டி ஸ்பிரே செய்யவேண்டும்.
இம்மாதிரி செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். உரச்செலவு, பூச்சிமருந்து செலவினை நீங்களாகவே குறைத்துக்கொள்ளலாம்.
3.. பயிருக்கு பூச்சி, பூஞ்சாளம் வராமல் இருக்க என்ன பண்ணலாம்?
ஆடாதொடை, வேம்பு, காட்டாமணக்கு, குப்பைமேனி, தும்பை இவைகளை சேர்த்து நீளமான குச்சியையும், தழையையும் நீளமான குச்சியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி எல்லாவற்றிலும் 4 கிலோ சேர்த்து பெரிய பாத்திரத்தில் 40 லிட்டர் தண்ணீர் ஊற்றி இவைகளை எல்லாம் போட்டு 20லிட்டர் ஆகும் வரை காய்ச்சி (சுண்டவைத்து) ஆறவைத்து, ஒரு டான்குக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றி 20 லிட்டர் தண்ணீரும் சேர்த்து அடிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 20 டான்க் அடிக்கவும். இது நல்ல பலன் அளிக்க வல்லது.