குங்குமப்பூ சாகுபடி: 1 கிலோ 3 இலட்சம்…

saffron cultivation-1-kg-to-3-million


குளிர்பிரதேசங்களில் மட்டுமே குங்குமப்பூ துளிர் விடுகிறது. காஷ்மீர் மட்டுமே குங்குமப்பூ சாகுபடிக்கும் சாத்தியமாகி வருகிறது. இச்செடிகள் 10 முதல் 20 செ.மீ. உயரம் வரை வளரும்.

இவை கிழங்குகள் மூலம் நடவு செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு சுமார் 1,80,000 கிழங்குகள் நடவு செய்யலாம். இயற்கை முறையாக பராமரிக்க வேண்டும்.

அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பூக்கின்றது. அந்த பூக்களின் மத்திய பகுதியில் உள்ள மகரந்த தாளே “குங்குமப்பூ” என்று அழைக்கப்படுகிறது. இவை சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் மெல்லிய நார் போன்று காணப்படும்.

குங்குமப்பூ பூத்த 3 முதல் 4 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அவை 15 முதல் 20 நாட்கள் வரை வெயிலில் உலர வைக்கப்படுகிறது. அப்போது அந்தப் பூவில் உள்ள குங்குமப்பூக்கள் தனியாகப் பிரிந்து விடும். சுமார் 40 முதல் 50 பூக்களிலிருந்து 1 கிராம் அளவே குங்குமப்பூ கிடைக்கிறது.

குங்குமப்பூக்கள் மருந்தாகப் பயன்படுகின்றன. வாசனைக்காகவும், நிறத்திற்காகவும் மற்றும் உணவுக்காகவும் அதிகம் பயன்படுகின்றன.

முதல் இரகப் பூக்கள் 1 கிலோ 3 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கொடைக்கானல் பகுதியில் குங்குமப்பூ கிழங்குகள் நடவு செய்து 4 வருடம் ஆகிறது. காஷ்மீரில் அக்டோபர் மாதத்தில் பூக்கும் பூக்கள் கொடைக்கானலில் செப்டம்பர் மாதத்திலேயே பூத்து விட்டன. இதுவரை 50க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென இருக்க வேண்டும் என்ற ஆசையில் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்துவார்கள். ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கருவுற்ற 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுகிறது. குழந்தைக்கு தேவையான சத்தும் கிடைக்கிறது. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios