மாடித் தோட்டம் அமைக்க நாற்றுகளை இப்படிதான் தயார் செய்யணும்...

Prepare the seedlings to prepare the floor garden
Prepare the seedlings to prepare the floor garden


மாடித் தோட்டம் அமைக்க தேவையான நாற்றுகளை தயார் செய்யும் முறை...

** கத்திரிக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகளின் விதைகளை நேரடியாக ஊன்றக் கூடாது. 

** மாடித்தோட்டத்தின் ஓர்  ஓரத்தில், மூன்றடி அகலம், ஆறு அடி நீளம், அரையடி உயரத்தில் மண்ணைக் கொட்டி மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். 

** அந்த பாத்திகளில் கல், குப்பைகள் இல்லாமல் சுத்தமாக்கி, சமமாக மட்டப்படுத்த வேண்டும். 

** பாத்திகளில் குச்சியால் கோடு போடுவது போல கீறி, அந்தக் கோட்டில் காய்கறி விதைகளைத் தூவி, கைகளால் லேசாக மண்ணைத் தள்ளி விதைகளை மூடி, பூவாளி மூலமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.

** 20 முதல் 25 நாட்களுக்குள் நாற்றுகள் வளர்ந்துவிடும். அந்த நாற்றுகளை தொட்டிகளில் எடுத்து நடவு செய்ய வேண்டும். 

** கீரைகளை விதைப்பதற்கும் இதுபோன்ற மேட்டுப்பாத்திகள்தான் சிறந்தது. 

** பொன்னாங்கண்ணி, புதினா போன்ற கீரைகளுக்கு விதை தேவையில்லை; சமையலுக்கு வாங்கும் கீரைகளின் தண்டுகளை நட்டுவைத்தாலே போதுமானது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios