பருத்தி விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய அங்கக வேளாண் தொழில்நுட்ப வழிகள்...
** மரபு வழி வேளாண்மையில் அதிகப்படியான இரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதினால் வேளாண் சுற்று சூழலின் அனைத்து அங்கங்களும் மாசு அடைகிறது.
** அங்கக பருத்தி உற்பத்தியில் அனைத்து இடுபொருட்களும் இரசாயனம் சாராத பொருட்கள். மேலும் இவை சுற்றுப்புற சீர்கேடுகளின் பாதிப்புகளை குறைக்கிறது.
** நூல் இழைகளில் பூச்சி மருந்துகள் படிந்திருப்பதினால் உபயோகிப்பாளர்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கும்.இயற்க்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அங்கக வேளாண்மையில் இயற்கையான நோய் கட்டுப்பாட்டு முறைகளை கையாளுவதாலும் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.
** ஜவுளி தொழிற்சாலைகள் மற்றும் சாயப் பட்டறைகளினால் அதிக அளவில் வெளியிடப்படும் சுத்திகரிக்காத மற்றும் மறு சுழற்சி செய்யப்படாத கழிவுநீர் மனிதர்களுக்கு உடல்நல குறைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, கால்நடைகள் மற்றும் ஆறுகள்,கால்வாய்களிலுள்ள மீன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
** இருப்பினும் இத்தகைய மாசுபட்ட நீரை பருத்தி பயிர்களின் பாசனத்திற்க்கு உபயோகப்படுத்துவதால் மகசூல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.
** மண்ணில் உள்ள நன்மை செய்யும் உயிர்களை பாதிப்பதினால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், பருத்தியில் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்க்கையான ஒட்டுண்ணிகள் மற்றும் பறவையினங்களின் எண்ணிக்கையை குறைத்து சமநிலையை பாதிக்கிறது.
** அங்கக வேளாண் சுற்றுப்புற சூழல்களின் பல்வேறு அங்கங்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதின் மூலம் இயற்கை சமநிலைக்கு உதவுகிறது.