இயற்கை வழி கோழி பண்ணை அமைக்க என்னவெல்லாம் தேவை. தெரிஞ்சுக்க வாசிங்க...
இயற்கை வழி கோழி பண்ணைக்கு ஒரே ஒரு தேவை நீர் மட்டுமே, அதை தவிர வேற எந்த ஒரு ரூபாய் செலவும் இருக்க கூடாது. ஒரே ஒரு ஏக்கர் நிலம் எடுத்து கொள்ளுங்கள், பின்பு பின்னப்பட்ட தென்னை ஓலை இரண்டு அடுக்கு கட்டி பன்னிரண்டு அடி உயரத்தில் அதன் சுற்றியும் வேலி அமைத்து கொள்ளவும்.
பின்பு நிலம் முழுவதும் இயற்கையிடமிருந்து பெற்றது மற்றும் உங்களுக்கு தேவை இல்லை இது குப்பை முடிவு செய்தது அனைத்தையும் முடாக்காக போடவும் (நெல் புல், காய் கழிவுகள், இலைகள், தேங்காய் நார், தலைகள் என கால் அடி உயரத்திற்கு). ஒரு ஏக்கரில் அங்கங்கு நீர் தெளிப்பு இயந்திரம்(Sprinklers) வைத்து விடுங்கள்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது வாரத்திற்கு மூன்று முறை இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம் என Sprinklers-யை போட்டு விட்டால் போதும்.
மேலே கூறப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு ஒரு இரண்டு வாரம் கழித்து ஒரு 200 நாட்டு கோழிகளை விட்டு விடுங்கள். இந்த இரண்டு வாரங்களில், மூடாக்கு அமைத்துள்ளதனால் மண்ணில் எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும், அதனால் அதிகமான நீர் தேவையும் இருக்காது.
அதே வேளையில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமடைந்து கொண்டே இருக்கும். நுண்ணுயிர்கள் அதிகம் ஆகும் பொழுது மண்ணுக்கு மேலே இருக்கும் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மட்க ஆரம்பிக்கும். அப்பொழுது அதில் பூச்சி, கரையான், புழு ஆகியவை உயிர் பெரும், அதே கணம் மண்ணில் ஈரம் உள்ளதனால் சிறு செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
கோழிக்கு தேவையான உணவு அத்தனையும் இதிலுருந்து கிடைத்து விடும். மேலும் கோழியின் கழிவுகளும் மண்ணுக்கு செலுத்தப்பட்டு கொண்டே இருக்கும். இதன் வழி இயற்கையின் உயிர் சுழற்சி ஒன்றை இங்கு உருவாக்கி அதன் மூலம் விஷமற்ற உணவையும், நட்டமில்லா வருமானமும் பெற முடியும்.
கோழிகளை விட்ட பிறகும் வாரத்திற்கு மூன்று முறை இரவு நேரங்களில் நிலம் முழுவதும் நீர் தெளிக்க வேண்டும். இது மழையை செயற்கையாக பெய்ய வைப்பது. இந்த சுழற்சியினை மீண்டும் மீண்டும் நடந்தே கொண்டே இருக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு பின்பு மாதம் தலா 50 கோழிகள் என்ற வீதம் விற்பனை செய்தால் கூட மாதத்திற்கு பத்தாயிரம் எடுத்து விட முடியும்.
ஆண்டுக்கு மூன்று முறை குப்பைகளை அதிகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு எந்த செலவும் ஆகாது, மாறாக சில விவசாயிகள் சேர்ந்து கிடக்கும் இலை கழிவுகளை அகற்ற இயலாமல் எரித்து விடுகின்றனர்.
அது போன்ற விவசாயிகளிடமிருந்து தலை, இலைகளை கொண்டு வந்து வயல் முழுதும் பரப்பி விடலாம். இங்கு ஆகும் செலவு வேலி அமைப்பதற்கும், Sprinklers அமைப்பதற்கு மட்டுமே அதுவும் ஒரு முறை செலவு தான். தீவன செலவு எதுவும் இல்லை, மின் இயந்திரங்கள் தேவை இல்லை, இயற்கையால் வளர்க்க பட்ட எந்த ஒரு நஞ்சுமில்லாத கோழிகள் கிடைத்து விடுகிறது.
நீர் மட்டுமே இங்கு முதலீடு. கோழிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகம் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அணைத்து கோழிகளுக்கும் சரியான அளவு உணவு கிடைத்து கொண்டிருக்கும்.
இது மசானபு புகாகாவின் புத்தகங்களான "ஒற்றை வைக்கோல் புரட்சி" மற்றும் "இயற்கைக்கு திரும்பும் பாதை" படித்து கொண்டிருக்கும் பொழுது தோன்றிய யோசனை. முடிந்தால் முயற்சித்து பாருங்கள்.