நாட்டு கோழிகளுக்கான கலப்பு தீவனம்:

தேவையானப் பொருட்கள் :

மக்காச்சோளம் 40 கிலோ

சோளம் 7 கிலோ

அறிசிகுருணை 15 கிலோ

சோயா புண்ணாக்கு 8 கிலோ
 
மீன் தூள் 8 கிலோ

கோதுமை 5 கிலோ

அரிசித் தவிடு 12.5 கிலோ

தாது உப்புக் கலவை 2.5 கிலோ

கிளிஞ்சல் 2 கிலோ

மொத்தம் 100 கிலோ

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.

மூலிகை மருத்துவம்

சின்ன சீரகம் 10 கிராம்

கீழாநெல்லி 50 கிராம்

மிளகு 5 கிராம்

மஞ்சள் தூள் 10 கிராம்

வெங்காயம் 5 பல்

பூண்டு 5 பல்

சிகிச்சை முறை:

சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம்அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.