குறைந்த செலவு; அதிக லாபம்; “எள்”.

Low cost more profit Int
low cost-more-profit-int


ரகங்கள்:

கோ.1, டி.எம்.வி 3, டி.எம்.வி.4, டி.எம்.வி.6, டி.எம்.வி.7, எஸ்.வி.பி.ஆர் – 1, வி.ஆர்.ஐ – 1, வி.ஆர்.ஐ –2. 

நிலம் தயாரித்தல்:

நிலத்தை நன்கு புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 10 வண்டி தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு இட வேண்டும்.

பாத்திகள் அமைத்தல்:

நிலத்தில் 20 சதுர மீட்டர் அல்லது 10 சதுர மீட்டர் கொண்ட சிறுசிறு பாத்திகளாக அமைக்க வேண்டும்.

விதையளவு:

ஏக்கருக்கு 2 கிலோ.

விதை நேர்த்தி:

விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன் அசோஸ்பைரில்லம் (இதர) 1 பொட்டலம், பாஸ்போ பாக்டீரியா 1 பொட்டலம் ஆகிய உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதைநேர்த்தி செய்து பின்பு விதைக்க வேண்டும்.

உரமிடல்:

மண் பரிசோதனை முடிவுகளின்படி, உரமிட வேண்டும். மண் ஆய்வு செய்ய இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையின்படி உரமிடலாம். உயிர் உர விதைநேர்த்தி செய்திருப்பின், ஒரு ஏக்கருக்கு யூரியா 19 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 58 கிலோவும், பொட்டாஷ் 15 கிலோவும் இட வேண்டும்.

நுண்ணூட்ட உரமிடல்:

எள் நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோவை மணலுடன் கலந்து சீராக வயலில் தூவ வேண்டும்.

விதையளவு:

ஒரு ஏக்கர் விதையளவான 2 கிலோவுடன் 4 பங்கு மணல் கலந்து 3 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைத்த 30 ம்நாள் 30 இன்ட் 30 செ.மீ., இடைவெளி இருக்கும்படி செடிகளை கலைத்தல் வேண்டும்.

களை மேலாண்மை:

விதைத்த 15 நாட்கள் கழித்து முதல் கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாம் கைக்களையும் எடுக்க வேண்டும்.

நீர்மேலாண்மை:

மண்ணின் தன்மை, பருவ நிலையைப் பொருத்து நீர்ப்பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம், காய் முதிர்ச்சியடையும் பருவம் ஆகிய பருவங்கள் முக்கியமானவை. இப்பருவங்களில் கண்டிப்பாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். இல்லை எனில், மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

அறுவடை:

செடியின் கீழிலிருந்து 25 சத இலைகள் உதிர்ந்து விடும். காய்கள், தண்டுப்பாகங்கள் பழுப்பு நிறமாக மாறும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10 வது காயில் உள்ள விதைகள் கருப்பாக மாறியிருக்கும். இந்த அறிகுறிகள் தென்படும் போது, அறுவடை செய்து விடவேண்டும்.

இந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடித்து எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios